cookie

Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Thursday, August 9, 2012

அன்று பூத்த மலர்கள்


காதல் பரிசு  

அகத்தில் அவள் நீக்கமற நிறைந்திருந்தாலும் 
என்னோடு புறத்திலும்  இருக்க வேண்டி, விரும்பி  
இரு திங்கள் உதிர்ந்த என்னவளின் - உவர் துளிகள் 
இன்று மணித்துளிகளாக என் இடக்கையை அலங்கரிக்கின்றன...



என் கல்லூரி வாழ்வில் "கவிதை" என்று நானே கூறிக்கொண்ட என்னுடைய  கிறுக்கல்கள்


மனம் 

என் உடலில் இல்லாத பகுதி மனம் - அது 
உன்னை நினைக்குதே தினம் 

சம்சாரம் அது மின்சாரம் 

சம்சாரத்துடன் நொடிக்கு மூன்று முறை வந்த 
சண்டையால், தற்கொலை செய்து கொண்டது 
சமையலறையின் பல்பு. 

நெக்டர் 


உன் இதழ்கள் என்ன நெக்டர் சுரக்கும் ஊற்றா,

      ஒரே முத்தத்தில் ரத்தத்தின் சர்க்கரை அளவு 
                  முன்னூறு ஆனதேன்? 

கடத்தி


செப்புக் கம்பிகள் நற்கடத்திகள் 
         கற்றுக்கொண்டது  இயற்பியலில் - என்னை 
செப்படி வித்தை செய்த உன் கண்கள்  மீக்கடத்திகள் என்று 
        கற்றுக்கொண்டது காதல் உளவியலில்.

காதல் வைரஸ்


என் மனம் எனும் கணினியை தாக்கும் 
    லவ் பக் வைரஸ் நீ என்றால்
என் anti வைரஸ் software அனைத்தையும் 
   நானே uninstall செய்து விடுவேன்.

வருகை பதிவு


கல்லூரிக்கு வருகிறேன் என்தைவிட - உன்னை 
     காண  வருகிறேன் என்ற களிப்பு மிகுதியால் 
விடுப்புக்கு விண்ணப்பிக்கவே விருப்பமில்லை 
    கண்ணே...


நினைவு வரும் போதெல்லாம் மலரும்...