cookie

Tuesday, March 11, 2014

வயசுப் பசங்க...



16ஆம் வகுப்பு படிக்க பிறந்தஊர் துறந்து 50 மைல் தொலைவில் இருந்த புது ஊருக்குள் புகுந்தான் பாலா. மகனை மறுவீட்டிற்க்கு அனுப்ப பெற்றோரும் உடன்வந்தனர். உலகத்தாய்மார்களின் "என் மகன் யோக்கியன்" விதிக்கு முற்றலும் உடன்பட்ட பாலாவின்தாய் "தம்பி நல்லா சாப்பிடு, உடம்ப பாத்துக்கோ, உன்ன மாதிரி நல்ல பசங்க கூட மட்டும் சேந்துக்கோ, வாரவாரம் ஊருக்கு வந்துரு"...

"இந்தா..., வாராவாரம் ஊருக்கு வரக்கூடாது, ஒழுங்கா இங்கயே இருந்து படி. வாரவாரம் ஊருக்கு வந்தா சாப்பாடுக்கு நான் கட்டுற காசு வீனாப்போகும். மாசத்துக்கு ஒரு தடவ வந்தாப் போதும்" (இத யாரு சொல்லியிருப்பாங்கன்னு தனியா சொல்லனுமா?)              

"நீங்க சும்மா இருங்க, உனக்கு அம்மாவைப் பாக்கணும்னு தோனுச்சுன்ன வந்துரு" என்று பாசத்தைப் பொழிந்துவிட்டு பெற்றோர் இருவரும் வீட்டுக்கு திருபினர். (80 மாணவர்கள் விடுதியில் இருந்தும்) பாலா மட்டும் தனியாக தன்னுடைய அறை நோக்கிச் சென்றான்.

அவன் வாழ்வில் முதல் முறையாக விடுதிவாசம். பார்த்த முகம், பழகிய மணம் எங்கும் தென்படவில்லை விடுதியில். முதல்நாள் வகுப்பிற்கு சென்றபோது விடுதியில் பார்த்த சிலமுகங்கள் சிரிக்க சற்று ஆறுதலானது பாலாவிற்கு. மாலை வகுப்புகள் முடந்தபின்பு மீண்டும் விடுதி. தனிமையில் இருந்து விடுபட உடன் படிக்கும் மாணவன் அறைக்குச் சென்றான் பாலா.

வரலாறு நினைவு கூறப்பட்டது. செய்ததை, (சுவாரசியம் கருதி) செய்ய நினைத்ததை, செய்யாமல் விட்டதை, பிறர் செய்ததையும்கூட தான் செய்ததாக புனைந்த பலகதைகள் மாணவர்களுக்கு இடையில் மன்ப்பெயர்ச்சி அடைந்தன. "வாங்க"வில் ஆரம்பித்த அறிமுகம், "வாடா"வில் பற்றிக்கொண்டது. 16 வருட கதைகள் அல்லவா? எவ்வளவு நேரம் பேசினாலும் போதவில்லை.   

இப்படி பழங்கதை பேசிக்கொண்டிருந்த ஒருநாள். படிப்பதற்க்கான நேரத்தை நினைவுறுத்தும் மணி ஒலித்தபின்பும் பாலாவும் அவன் நண்பன் குமாரும் உணர்ச்சிபொங்க எதையோ பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அந்த நேரம்தான் நீண்ட விடுப்பிற்குப் பின்பு மீண்டும் பணிக்கு திரும்பி இருந்தார் துனைக்காவலர் (sub-warden) ராஜு.

பேச்சின் ஈர்ப்புவிசை எந்த அளவு என்றால்? மற்ற மாணவர்கள் அனைவரும் ராஜுவின் வருகையை புரிந்து கொண்டு பதுங்குளியில் ஒளிவதைக்கூட கவனிக்காத அளவுக்கு இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தது குமாரின் அறையின் முன்பு  ராஜு MUFTI யில் (Bermuda Shorts மற்றும் T-Shirt) இருந்தார். யாரோ உணவுவிடுதியின் சமையல் அறையில் வேலை செய்பவர்தான் வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டனர் இருவரும்.

எதுவும் காட்டிக் கொள்ளாமல் ராஜுவும் சிலநொடிகள் அங்கேயே நின்றார். சிலநொடிகள் கழித்து யாரோ நிற்ப்பதை உணர்ந்த பாலா. "என்னண்ணே வேணும்?" என்று கேட்க.

குழப்பம் அடைந்த ராஜு "நான் யாருன்னு நினைசீங்க?" என்று கேட்க.

"Kitchen Master Assistant தான ?" என்று குமாரும், பாலாவை ஆமோதிக்க.

இரத்த நாளங்கள் புடைக்க "சிக்கல் சண்முகசுந்தரத்தை" விட OVER REACTION கொக்டுக்க ஆரம்பித்தார் ராஜு.

(Click play button and continue )



ராஜு stay in a process
top dollar
going loosed
getting time
ready come on
yeah, lets go to sub-warden room...................


என்று இருவரையும் இழுத்துக்கொண்டு தன்னுடைய அறையை அடைந்தார். அறையின் முன்பு, நிலையின் மேல்புறம்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
     உயிரினும் ஓம்பப் படும் 

ராஜு நிகழ்த்திய பல சாதனைகள் குறித்த சொற்ப்பொழிவோடு சில மிரட்டல்களையும் சேர்ந்துக் கொண்டார். இறுதியாக 45 நிமிட பிரசங்கம் முடிந்தபிறகு பாலா மற்றும் குமார் இருவரையும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டுச் சொல்லுமாறு கூறினார்.

இருவருக்கும் மன்னிப்புக் கடிதத்தில் என்ன எழுதவேண்டும், எதற்க்கெல்லாம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தெரியவில்லை. அதனால் ராஜுவிடம் ஒரு மாதிரி கடிதம் கேட்டனர்.

"ஒரு apology letter கூட எழுதத் தெரியாதா?"

"முன்னப் பின்ன எழுதுனது இல்ல Sir"

"ஓ ! நீங்க ரெண்டுபேரும் அவ்வளவு நல்லவங்க....   இருக்கட்டும், இருக்கட்டும் அதையும்  பாக்கலாம்..."
 
ராஜு, அலமாறி ஒன்றைத் திறந்து விட்டு அதிலிருந்து ஒரு மாதிரிக் கடிதம் எடுத்துக்கொள்ளும்படி கூறினார். அங்கு இருந்த மனிப்புக் கடிதங்களையெல்லாம் விலைக்குப் போட்டால் ஒரு மாத விடுதிக்கட்டணம் கட்டிவிடலாம். அவ்வளவு பாவங்களுக்கும் மனிப்பு வழகியுள்ளார் ராஜு. தங்களுக்குப் பொருத்தமான கடிதத்தை தேடும்போது, அதில் ஒன்றில் இனிமேல் நான் "சிறுநீர் கழிக்கச் செல்லமாட்டேன்" என்று எழுதி இருந்தார் ஒரு மாணவர். "ஐயோ பாவம், இதுக்கு நாம பரவாஇல்ல" என்று மனதை தேற்றிக்கொண்டு தங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு தேடிக்கொண்டனர்.

பாலா மற்றும் குமார் இருவரும் மனிப்புக் கடிதம் கொடுத்த செய்தி விடுதி முழுவதும் தெரிந்து ஒருவர் மாறி ஒருவர் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள வந்தனர். வந்தவர்கள் அனைவரும் அவர்களுக்கே உரித்தான மொழியில் "ராஜு" குறித்து சிறு குறிப்பு வரைந்தனர்.

"ராஜு" சிறுகுறிப்பு வரைக

1. Botany department lecturer
2. ஆந்திராவில் இருந்து வந்தவர். இருந்தாலும் தமிழ் தெரியும்
3. இன்னும் திருமணம் ஆகவில்லை.
4. பொண்ணு பாக்க போறதுக்கு அடிக்கடி லீவ் போட்டு ஊருக்கு போயிடுவார்.
5. ரொம்ப கோவக்காரர்
6. Strict Officer
7.  (குற்றப் புலனாய்வு துறையில் பணிசெய்ய வேண்டியவர் உயரக் குறைவின் காரணமாக இங்கு வந்துவிட்டார்)

இன்னும் நெறையா,  பசங்க சொன்னத அப்படியே எழுதமுடியாது அதனால நீங்களே நடுவுல, நடுவுல உங்களுக்கு தெரிஞ்ச ரொம்ப நல்ல கெட்ட வர்த்தைகள போட்டுக்கோங்க...

இப்படியே சில நாட்கள் கழிந்தன. மெல்ல மெல்ல பாலாவுக்கு விடுதிவாசம் பிடிக்கத் தொடங்கியது. குமார் இல்லாமல் மேலும் நான்கு நண்பர்கள் கிடைத்தார்கள். ஊருக்குப் போகும் நாளை எண்ணி ஏங்கத் தொடங்கியது பாலாவின் மனம்.

வெள்ளி மாலை வகுப்புகள் முடிந்தவுடன் கிடைத்த முதல் பேருந்தில் தாங்கள் பிறந்த ஊருக்கு பயணித்தனர் நண்பர்கள். சிறந்த கவனிப்பு முடிந்து 2 கிலோ எடை கூடி கூட்டுக்குத் திரும்பினர் மீண்டும்.

விடுமுறை சாதனை விளக்கக் கூட்டம் போட நால்வர்  அணி மீண்டும் திரண்டது.

பாலா: "லீவ் ல என்னடா பண்ணீங்க"

குமார்: "மாமா கல்யாணத்துக்கு போயிருந்தேன்".

சேகர் : "ஒன்னும் செய்யல, வீட்லதான் இருந்தேன்"

கணேஷ்: "படத்துக்கு போயிருந்தேன்".

குமார்:  "என்ன படத்துக்கு போன ?"

கணேஷ்:   


மூவரும்: "அய்யய்யோ, கணேஷ் வெட்கப்படுராண்டா"

குமார்: "கணேசா, மரியாதையா சொல்லிரு..."

கணேஷ்:   "BODY" அப்புறம் ஏதோ வந்துச்சி....

மூவரும்: "BODY யா"

சேகர்:  "கணேசு, படம் பேரே சூப்பரா இருக்கு, கத சொல்றா..."

கணேஷ்: " இப்பெல்லாம் நம்ப ஊர் படத்துலையே கதை இல்ல, நீ என்னடான்னா...

இந்த மாதிரி படத்துக்கெல்லாம் ஏதுடா கத?. இதெல்லாம் சொல்லிப் புரியவைக்க முடியாது. "

கணேஷ்: "நீங்க மூணுபேரும் இந்த மாதிரி படம் பார்த்ததே இல்லையா?"       

சேகர், குமார்: "பாத்துருக்கோம்..."  

பாலா: 

கணேஷ்: "அப்ப பாலா நீ இன்னும் வயசுக்கு வரல. சரி உடு மாமன் உனக்கு குச்சி கட்டீர்றேன்"

பாலா:


கணேஷ்: "இந்த வாரம், நாம யாரும் ஊருக்கு போகப்போறது இல்லேல்ல?"

மூவரும்:  "இல்ல..."

கணேஷ்: "சனிக்கெழம half day தான காலேஜ், அதுக்கப்புறம் free evening தான. 5 மணிக்கு வெளிய போயிட்டு 11 மணிக்கு வந்தாப் போதும்ல. அதனால அன்னைக்கி நாம எல்லாரும் படத்துக்குப் போறோம்"

குமார்: "பிளான் ஓகே, ஆனா சனிக்கெழம நாம எதிர்பார்க்குற படம் ஓடணுமே?".

கணேஷ்: "சிட்டிக்குள்ள, செந்தில் ஆண்டவர்னு ஒரு தியேட்டர் இருக்கு. அதுல முக்கால்வாசி இந்த மாதிரிப் படம்தான். அப்படி இல்லேன்னா day scholar பசங்ககிட்ட சொல்லி என்ன படம் ஓடுதுன்னு பாத்துட்டு வரச்சொல்லுவோம்"

பாலா : "அது ஏண்டா எல்லா ஊர்லயும் இந்த மாதிரிப் படம் எல்லாம் சாமிப் பேரு வச்ச தியேட்டர்லையே போடுறாங்க. எங்க வீட்டுக்கு பக்கத்துல கூட  இந்த மாதிரி ஒரு தியேட்டர் இருக்கு, அது பேரு மூர்த்தி"

சேகர்: "இப்ப அதுவா முக்கியம்? சனிக்கெழம படத்துக்குப் போறோம் குஜால் பண்றோம்."

கணேஷ்: "பாலா, வீட்டுக்குப் பக்கத்லையே தியேட்டர் வச்சிக்கிட்டு படம் பாத்ததில்லேன்னு சொல்ற?"

பாலா: "வீட்டுக்கு பக்கத்துல இருந்ததாலதான் பாக்க முடியல..."


வியாழக்கிழமை

பாலா: "கணேஷ், என்ன படம் ஓடுதுன்னு விசாரிச்சியா ?"

கணேஷ்: "கேட்டாச்சு, நேத்துதான் படம் மாத்திருக்கான். நம்மக்கு தேவையான படம்தான் ஓடுது".    


நால்வரும் சனிக் கிழமைக்காக காத்திருந்தனர், சனியும் வந்தது...

05:00 மணி அடிக்கவும், நால்வரும் பேருந்து நிறுத்தம் நோக்கிப் பறந்தனர்.

பாலா: "சீக்கிரமா போகணும், நான் படத்த மொத சீன்ல இருந்து பாக்கணும்..."

சேகர்: "உன்னோட ஆர்வத்த கொஞ்சம் அடக்கிகிட்டு வா, 06:30 க்கு தான் படம் போடுவாங்க..."

அங்கு வந்த முதல் அரசுப் பேருந்தில் நால்வரும் ஏறிக்கொண்டனர்.  பேருந்து நகர, நகர பாலாவின் நாடித்துடிப்பும் உயர்ந்து கொண்டே வந்தது. சிறிது நேரத்தில் நகர எல்லையைத் தொட்டது பேருந்து. பேருந்தின் படிகள் காலியாக இருப்பதால் அதிலும் ஆட்க்(டு)களை நிறப்புவதற்க்காக நிறுத்தத்தில் நிறுத்தினார் ஓட்டுனர். அங்கிருந்த சுவரில் செந்தில் ஆண்டவர் திரையரங்கத்தின் சுவரொட்டி ஓட்டப்பட்டிருந்தது அதில்

"மிசன் இம்ப்பாசிபிள் 2அஞ்சா நெஞ்சன்  டாம் க்ருஸ்
(நினைத்ததை முடிப்பவன்)"

நால்வரும் ஒருவரை ஒருவர் சோகத்துடன் பார்த்துக் கொண்டனர். அம்மன் தரிசனம் கிடைக்காததால் அஞ்சா நெஞ்சனை தரிசித்துவிட்டு வந்தனர்.

விடுதி வந்தும் ஏமாற்றம் குறையவில்லை பாலாவிற்கு. பாலா வெறியுடன் கணேஷ்ப் பார்க்க...

கணேஷ்: "படத்த மாத்திட்டா அதுக்கு நான் என்னடா பண்ண... சரி விடு அடுத்தவாரம் பக்கத்து ஊருக்கு போயாச்சும் பாக்குறோம்"

கணேஷ் என்ன ஆறுதல் கூறியும் பாலா சமாதானம் அடையவில்லை. பதில் ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டான்...

ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு கணேஷ், சேகர் குமார் மூவரும் பாலாவின் அறைக்கு வந்தனர். பாலா அவர்கள் வந்ததின் காரணம் புரியாமல் விழித்தான்.

கணேஷ்: " 10 நம்பர் ரூம்ல இருக்கான்ல botany department செல்வம்...
 அதாண்டா ஓசி சோப்பு"

பாலா: "ஆமா, அவனுக்கென்ன?"

சேகர்: "அவனுக்கு ஒன்னும் இல்ல, hostel க்கு லீவ் போட்டு ஊருக்கு போனவன் நாளைக்கி வராம இன்னைக்கே வந்துட்டான்"

பாலா: "இதெல்லாம்  ஒரு மேட்டரா?"

குமார்: "அது மேட்டரில்ல, அடுத்து அவன் சொன்னதுதான் மேட்டரு"

பாலா: "என்னது?"

கணேஷ்: "லட்சுமி தியேட்டர்ல இன்னைக்கி  படம் மாத்திட்டான் ம்ம்ம்....  நம்ம படம்தான்  ஓடுது..... போலாமா? "

பாலா: "சனிக்கெழம போறதுக்கு இப்போவே எதுக்குடா அலப்பர... ?"

குமார்: "ஒன்றே செய், நன்றே செய், இன்றே செய், இப்பொழுதே செய்"

பாலா: "நீங்கெல்லாம் என்ன லூசாடா? attendance எடுக்க வருவாங்க. மாட்டிப்போம். பெரிய பிரச்சன ஆயிரும்"

சேகர்: "என்கிட்டே பிளான் இருக்கு.

              1.01:00 to 4 silent hour
              2. மதியம் 01:15 மணிக்கு attendance போடுவாங்க
              3. 4 to 7 free time
              4. 7 to 8 dinner time

 சரியா 01:45 க்கு ஒவ்வொரு ஆளா foot ball ground side வழியா college ஸ்டாப்க்கு அடுத்த stop ல போய் பஸ் ஏற்றோம். லட்சுமி தியேட்டர் பக்கத்து ஊருதான். 02:00 மணிக்கு பஸ் ஏர்னா 02:45 க்கு போயிறலாம். 03:00 மணிக்குப் படம். 04:30 மணிக்கு முடியும் 05:30 மணிக்கு திரும்ப வந்துரலாம்.

என்ன சொல்ற... ? "

பாலா: "சரிதான், ஆனா கொஞ்சம் பயமா இருக்கு..., இவ்வளவு ரிஸ்க் எடுக்கணுமா...
 
படம் பேரென்ன...?"

கணேஷ்: "Sex Revenger"

01:59 க்கு நால்வரும் பேருந்து நிறுத்தத்தில் நின்றனர். அவர்கள் போட்ட திட்டம் எதிர்பார்த்தது போலவே நடந்தது. லட்சுமி தியேட்டரை அடைந்தவுடன் அருகில் இருந்த தேநீர் கடையில் தஞ்சம்புகுந்தனர்.

நுழைவுச் சீட்டு வாங்க யார் போவது? அனைவருக்கும் தயக்கம். "முழுவதும் நனைந்த பிறகு முக்காடு எதற்க்கு?" என்று பாலா தானே நுழைவுச் சீட்டு  வாங்கச் சென்றான். பின்பு அனைவரும் திரையரங்கத்திற்க்குள் ஓடிச்சென்று ஒளி குறைவாக இருக்கும் இடம் தேடி அமர்ந்து கொண்டனர்.

விளம்பரங்கள் சில நிமிடங்கள் பின்பு படம் திரையிடப்பட்டது...

படம் பெயர், நடிகர், நடிகைகள் பெயர் வரிசையாக வர அடுத்து "costumes" என்று வரவும். பாலாவிற்கு சந்தேகம் வந்துவிட்டது. அருகில் இருந்த சேகரிடம் கேட்டான்.

"என்னடா costumes னு வருது, நாம எதிர் பார்க்குறது..."

அதற்க்கு சேகர் "இந்த மாதிரி படத்துல பெரிய பெரிய shoe மட்டும் போட்டுகிட்டு வருவாங்க. குதிர, நாய் அதெல்லாம் டிரஸ் போட்டிருக்கும். அதுக்கான  costumes. நீ ஒன்னும் கவலப்படாத" என்று நண்பனுக்கு ஆறுதல் கூறினான்.      

நோஞ்சான் போலிருக்கும் ஒருவன்தான் நாயகன், படம் சுழல ஆரம்பித்தது. சிறிது நேரத்தில், நோஞ்சான் நாயகன் வேதியல் கழிவுகள் இருக்கும் தொட்டியில் சில வில்லன்களால் தள்ளப்படுகிறான்.

பலமுறை இருக்கையின் நுனிக்கு வந்து பின்பு இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் பாலா.

சிறிது நேரத்தில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் "இடைவேளை" என்று அறிவிக்கப்பட்டது.

நளபாகம் எதிர்பார்த்துக் காத்திருந்த பாலாவிற்கு, 45 நிமிட படம் ஓடி முடிந்தும் இன்னனும் ஒரு ஊறுகாய் கூட கிடைக்காதது வெறுப்பின் உச்சத்திற்க்கு தள்ளியது. அதை உணர்ந்து கொண்ட கணேஷ். "இருடா இப்பத்தான படம் சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு, நோஞ்சான் மாதிரி இருந்தவன் இப்பதான் சக்திமான் மாதிரி ஆயிருக்கன். இனிமேப் பாரு புல்லா ... ம் ம் அப்பிடி இருக்கப் போகுது"

தன்னுடைய பங்கிற்கு சேகரும் "அப்படி இல்லேன்னா நடுவுலையே audience கேட்டாங்கன்னா, பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கு இனங்கன்னு துண்டுப் படம் ஓட்டுவங்க" என்று பாலாவின் இளைமைத் தீயிற்கு எரிபொருள் சேர்த்தான்.

இடைவேளை முடிந்த பின்பு படம் உச்சத்தை அடைந்தது. சக்திமானாக உருமாறிய நாயகன், பார்வை இழந்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பதும். வயதானவர்களுக்கு சாலையை கடக்க உதவுவதும். பலாத்காரத்தில் சிக்கிய பெண்களை காப்பாற்றுவதும்...

அதுவரை நம்பிக்கை இழக்காத பாலாவிற்கு அப்போது அழுகையே வந்தது...

இனியும் பொறுக்க முடியாது என்ற எண்ணம் வந்த போது, எழுந்து நின்று
"பிட்டு போடு........" என்று கத்த ஆரம்பித்தான். அவனுடன் சேர்ந்து மற்றமூவரும் கத்த, அணைத்து வைக்கப் பட்டிருந்த திரையரங்கத்தின் அத்தனை விளக்குகளும் பிரககசமாக ஒளிர்ந்தன.

அப்போதுதான் நால்வரும் கவனித்தனர், அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு இரண்டு வரிசைக்கு முன்பு sub-warden ராஜுவும் அமர்ந்திருந்தார்....  அவரும் இவர்களைப் பார்த்துவிட்டார்.

திரையரங்க அலுவலர்கள், நண்பர்கள் நால்வரையும் அரங்கத்தை விட்டு வெளியேற்றிவிட்டு படத்தை தொடர்ந்தனர்...

நால்வரும் சோகமாக வெளியே வர... பாலா மட்டும் "இப்படி ஆயிருச்சே, இப்படி ஆயிருச்சே, இதுக்கு தான் நான் மொதல்லையே சொன்னேன்..." என்று  புலம்பிக்கொண்டே வந்தான்.

 குமார் பாலாவிடம்  "நமக்கு எப்படித் தெரியும் அவரு இங்க இருப்பாருன்னு, சரி பயப்படாத பாத்துக்கலாம்."

பாலா: "நான் அதுக்கு வருத்தப் படல, 15 ரூவா குடுத்து டிக்கெட் வாங்கினோம் ஒரு சீன் கூட இல்ல, அத நெனைச்சாதான் வருத்தமா இருக்கு... ச்சே இப்படி ஆயிருச்சே..."