cookie

Tuesday, July 31, 2012

அ(கொ)லை பேசி - பாகம் 2

பாகம் 1 - தொடர்ச்சி

திங்கள்
காலை  08:00 மணி

கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் இருந்து கந்தன் சாவடி காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு...

முருகானந்தம், நான் ஏட்டு குமார் பேசுறேன், ஒரு பொண்ண காணோம்னு கேஸ் வந்திருக்கு. பொண்ணுக்கு வயசு 24, உயரம் சுமார் 5.6". நிறம் சிவப்பு. நீங்க  அனுப்பின ரிப்போர்ட் கூட மேட்ச் ஆகுது.

பொண்ணு பேரென்ன குமார்?
     சந்தியா...

அய்யாவும், திருப்பதியும் போஸ்ட் மார்டம்  ரிப்போர்ட் பத்தி பேச போயிருக்காங்க. வந்தவுடனே சொல்லிடுறேன். 

பாகம் 2 -  புலன் விசாரணை 

அரசு மருத்துவமனை 


 திருப்பதி வண்டிய பார்க் பண்ணிட்டு chief டாக்டர் ரூம்க்கு வந்துருங்க. மருத்துவமனை வாசலில் இறங்கிக் கொண்டு தலைமை மருத்துவர் அறை நோக்கி விரைந்தார் சரவணன். வழியில் பல அவலக்குரல்கள் அனைத்தையும் கடந்து கடைசியாக அந்த அறையை அடைந்தார்.


வாசலில் கொக்கு போல காத்திருந்தவரிடம்  கேட்டார், டாக்டர் இருக்காரா?.


    நீங்க (சீருடையில் இல்லாததால், வழக்கமான காலனியும் இல்லை)


சரவணன், இன்ஸ்பெக்டர்னு சொல்லுங்க


    உடனே சொல்றேன் சார் ("இன்ஸ்பெக்டர்", இவ்வளவு soft, பந்தா இல்லாம,    நம்பவே முடியல)


ஒளியின் வேகத்தில் திரும்ப வந்தவர், உங்கள உள்ள வரச்சொன்னறு சார்...


குட் morning doctor, ஐ அம் இன்ஸ்பெக்டர் சரவணன், கந்தன்சாவடி ஸ்டேஷன், பிஸியா இருக்கீங்களா, 10 மினிட்ஸ் பேசலாமா?
 
       தாராலமா பேசலாம். என்ன விஷயமா வந்தீங்க இன்ஸ்பெக்டர்?


சண்டே மோர்னிங் அனுப்பிச்ச பொண்ணோட போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்...

       போன் பண்ணியிருந்தா, அனுப்பி இருப்பேனே. இதுக்காக நீங்க வந்துருக்க     வேண்டாமே..


தேங்க்ஸ் டாக்டர், உங்களையும் நேர்ல பாத்துட்டு போலாம்னு தான் வந்தேன். அந்த ரிப்போர்ட் பத்தி சொல்லுங்க டாக்டர்.


       மரபணு சோதனைல, அந்த பொண்ணு உறவு வச்சிக்கிட்டது தெரியுது. முகத்துல மட்டும் 16 வெட்டு.


ஆயுதம்?

     பழைய தகடு அல்லது பட்டையான கூரான கம்பி. வெட்டப்பட்ட காயங்கள்ள  துரு இருந்தது. ஒவ்வொரு வெட்டும் கொஞ்சம் ஆழமா இருக்கு. வெட்டும் போது கைய வச்சி தடுக்க முயற்சி பண்ணதால கைலையும் வெட்டு, அப்பறம் உடம்பு முழுக்க...


பலாத்காரம்னு சொல்லமுடியுமா டாக்டர்?

    இருக்கலாம்..

thanks டாக்டர், தேவைப்பட்டா கால் பண்றேன். அப்பறம் வரும்போது பார்த்தேன், டெலிவரி ஆனவங்கள வார்டுக்கு வெளிய தரைல படுக்க வச்சிருக்காங்க?

     நா இதுல புதுசா சொல்ல என்ன இருக்கு, போதுமான பெட் இல்ல, இடம் இருக்கு பில்டிங் இல்ல. எத்தனையோ தடவ யார் யார்கிட்ட எல்லாம் சொல்லியாச்சு. எந்த பலனும் இல்ல. போன வாரம் கூட நாலு நாள் ஆன குழந்தையை பன்னி தூக்கிட்டு போயிருச்சி. நல்ல வேல உடனே பார்த்து கொண்டு வந்துட்டாங்க.

"பன்னி"   hospital குள்ள?

     அது ஒரு பெரிய பிரச்சனை..

நீங்க கவலப் படாதீங்க டாக்டர், அந்த பிரச்சனைய நான் பாத்துக்கிறேன் hospital க்கு என்னால எதாவது செய்ய முடியுமானு பாக்குறேன்.

    தேங்க்ஸ் இன்ஸ்பெக்டர்...

கட்டளைக்கு காத்துக்கொண்டிருந்த திருப்பதி, வண்டியை கிளப்பினார்...

திருப்பதி, hospital ல சுத்தி பன்னி திரியுதாம், அத முதல்ல கவனிங்க.
 
      சரிங்க அய்யா

ground பிரஷர் ரிப்போர்ட் வந்துரிச்ச?

     வந்துரிச்சிங்க அய்யா.

எதாவது உபயோகமா இருக்கா?

    ரெண்டு பேரோட காலடி தடம் இருக்குதாம், அதுல ஒருத்தனுக்கு இடது கால்ல எதாவது problem இருக்கலாம்னு வந்திருக்கு.

எவ்வளவு உயரம் இருப்பாங்க ரெண்டு பேரும்?

   சுமார் 170 லிருந்து 175 cm இருக்கலாம்

இது நமக்கு பெருசா உதவும்னு தோனல, ஏன்னா, பப்ளிக் place அதனால அந்த காலடி, கொலை பண்ணவங்க காலடிதான்னு உறுதியா சொல்ல முடியாது. எதுக்கும் அந்த "குலாய்" குடியிருப்புல விசாரிங்க.

    சரிங்க அய்யா.

போலீஸ் ஸ்டேஷன் வந்த சரவணனிடம், முருகானந்தம் கூடுவாஞ்ச்சேரி காவல் நிலையம் பற்றி கூறினார்.

திருப்பதி ஜீப் எஞ்சினை அணைக்க முயலாமல், neutral லில் இருந்த கியரை ரிவேர்ஸ்க்கு மாற்றினார். ஜீப்  சரவணனையும், திருப்பதியையும் அள்ளிக்கொண்டு ஜீப் கூடுவாஞ்சேரிக்கு பறந்தது.

கூடுவாஞ்ச்சேரி காவல் நிலையம்        


பரபரப்பாக உள்ளே நுழைந்த சரவணன், "இன்ஸ்பெக்டர்" என்றவுடன், குமாரின் தலை திரும்பிய திசை நோக்கி விரைந்தார். பரஸ்பர அறிமுகம் முடிந்தவுடன், குமார் அழைக்கப்பட்டார். 

குமார், என்னையா கேசு?

      அய்யா, சந்தியா னு 24 வயசு பொண்ணு காணோம்னு...

இன்னைக்கி வந்த கேசு தானே?

    அமாங்க.

கம்ப்ளைன்ட் கொடுத்தது யாரு?

   அவங்க அம்மா.

அந்தம்மா எங்க?

    வெளிய உட்கார செல்லிருந்தேங்க.

உள்ள வர சொல்லுயா.

     உடனே கூட்டிட்டு வர்றேன்.

45 வயது மதிக்கத்தக்க பெண்மணி உள்ளே அழைத்து வரபபட்டார். அழுது சிவந்த கண்கள்.

இன்ஸ்பெக்டர் தொடர்ந்தார்...

பொண்ண காணோம்னு எப்போ தெரியும்?

   இன்னைக்கு காலைல தான் சார்.

எந்த ஊரூ?

     திருநெல்வலி.

இங்க எப்போ வந்தீங்க?

    காலைல 7 மணிக்கு வந்தேன், புதன் கெலம மகள பொண்ணு பாக்க வர்ராங்க. முன்னாடியே சொன்னா வரமாட்டா அதான் இன்னைக்கி வந்து கூட்டிட்டு போலாம்னு வந்தேன். பொண்ணு படிக்கிற கலைமகள் நர்சிங் காலேஜ் hostel க்கு போனேன். அவங்க தான் சொன்னாங்க பொண்ணு சனிக்கிழமை மதியமே கெலம்பி போயிருச்சின்னு. (தொடர்ந்து பேச முடியாமல் துக்கம் வார்த்தைகளுக்கு  அணை போட்டது).

அழாம சொல்லுங்க, உங்க பொண்ணு லவ் கிவ்வு னு எதாவது?

    இல்லைங்கையா, ரொம்ப நல்ல பொண்ணுங்க.

இப்படித்தான் எல்லா பெத்தவங்களும் சொல்லுராங்க, சரி வேற யார் மேலையாவது சந்தேகம் இருக்கா?

   இல்ல,  எனக்கு இந்த ஊர்ல  யாரையும் தெரியாது.

பொண்ணோட அப்பா எங்க?

   கவர்மென்ட் பஸ்ல டிரைவர், ஒரு accident ல இறந்துட்டாருங்க, 10 வருஷம் ஆச்சு.

வேற யார் இருக்கா?

   நானும் என் பொண்ணும் மட்டும் தாங்க.

வருமானத்துக்கு என்ன பண்றீங்க?

     அவரோட பென்சன் வருதுங்க, எங்க அண்ணன் அப்பப்போ எதாவது கொடுப்பாரு.

மீண்டும் தன் அழுகையை தொடர்ந்தார்... 

சரி வெளிய உட்காருங்க என்று அந்தம்மாவை வெளியே அனுப்பிவிட்டு. குமாரிடம் கூறினார், நமக்கு மட்டும் ஏன்யா இப்படி உப்புமா கேசா வருது?

இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த சரவணன், சார் இந்த கேச, என்னோட ஸ்டேஷன்க்கு மாத்திக்கிறேன் நானே பாத்துக்குறேன்.

   நல்லதா போச்சு.  குமார் உடனே அந்த வேலைய பாருய்யா...

தன்னுடன் அந்த தாயை அழைத்துக்கொண்டு ஜீப்பில் ஏறி, அருகில் உள்ள உணவகத்திற்கு சொல்ல திருப்பதியை பணித்தார்.

எதப்பத்தியும் கவலப்படாதீங்க, எப்படியும் கண்டு புடிச்சிரலாம். முதல்ல சாப்பிடுங்க என்று உணவகத்தில் காலை உணவை வாங்கிக் கொடுத்து விட்டு இருவரும் உணவகத்தை விட்டு வெளியில் வந்து நின்றனர். 

அய்யா விசாரணை கைதிக்கே ஒரு நாளைக்கான சாப்பாடுக்கே  govt. ல 10 ரூபாதான் தர்றாங்க. நீங்க வேற வெளிய கைநீட்ட கூடாதுன்னு சொல்லிட்டீங்க. 

தெரியும் திருப்பதி, கவலைப்படாதீங்க இது என்னோட செலவுதான்.

      இப்போ அடுத்து என்ன பண்ணப்போறீங்க அய்யா

இந்தம்மா கிட்ட, அந்த பொண்ண காட்டிரலாம்னு நினைக்கிறேன், அதுக்கு தான்  முதல்ல சாப்பிட சொன்னேன். ஒருவேளை அந்த பொண்ண இருந்தா, இவங்க இன்னைக்கு முழுவதும் சாப்பிட மாட்டாங்க

    திருப்பதியிடம் இருந்து மௌனம் மட்டும் பதிலாய் வந்தது.

சிறுது நேரம் கழித்து உள்ளே சென்ற சரவணனிடம், என்னைய போற வலியில எதாவது பஸ் ஸ்டான்ட் ல இறக்கி விட்ருங்க சார் என்றார்.   

கண்டிப்பா, ஆனா அதுக்கு முன்னால ஒரு சின்ன வேலை இருக்கு.

    என்ன சார்.

ஒரு பொண்ண நீங்க அடையாளம் சொல்லணும், அதுக்கு நீங்க hospital வரணும்.

      அதுவரை அந்த பெண்மணி கண்களில் கட்டியிருந்த கல்லணை மீண்டும் உடைந்தது  

ஒரு சந்தேகம் தான், அவங்க உங்க பொண்ணா இல்லாம கூட இருக்கலாம்.  

மீண்டும் மனதை தேற்றிக்கொண்டு சரவணனுடன் சென்றார்.

பிணவறையின் கதவு திறக்கப்பட்டது. சிதைக்கப் பட்டிருந்த போதும் முகம் காட்டப்பட்டது. அந்த தாயின் இதய துடிப்பு இருமடங்கானது. இடுப்பில் இருந்த பிறவிக்குறி கண்டதும். தற்காலிகமாக நின்றே போனது. 

சில நிமிடம் கழித்து மயக்கம் தெழிந்தவரை, கண்களை நோக்கினார் சரவணன்

      எம்பொண்ணு தான் சார், என்று அவர் எழுப்பிய ஓலம், சரவணனின் கண்களையும் ஈரமாக்கின.

திருப்பதியை அந்த தாயின் உடன் இருந்து மற்ற வேலைகளை பார்க்க சொல்லிவிட்டு ஸ்டேஷன் வந்து தன் புலன் விசாரணையை தொடங்கினார் சரவணன். 

 விசாரணை    தொடரும் ...

Thursday, July 26, 2012

அ(கொ)லை பேசி

1. யார் அவள் ?

ஞாயிறு 

காலை 06:00 மணி...


சென்னைக்கு அருகில் உள்ள குழாய் குடியிருப்பு பகுதியில் இருந்து 
கந்தன் சாவடி  காவல் நிலையத்திற்கு அவசர  தொலைபேசி அழைப்பு வந்தது.

Constable முருகானந்தம் விலாசத்தை குறித்துக்கொண்டு, யார்கிட்டயும் சொல்லவேண்டாம் குறிப்பா கூட்டத்தை கூட்டிரவேண்டம்.அங்கேயே இருங்க நாங்க உடனே வர்றோம் என்று கூறி Phone receiver ரை விடுதலை செய்தார். அப்போது சரியாக உள்ளே வந்த inspector சரவணனிடம்(சரவணன் புதிதாக தமிழ்நாட்டின் தென் பகுதியில் இருந்து  சென்னைக்கு மாற்றலாகி வந்தவர்) , அய்யா, "குழாய்" குடியிருப்பு பகுதில எதோ ஒரு பொணம் கெடக்குதுன்னு போன் வந்தது.

சரவணன் கேட்டார், என்னையா அது  "குலாய்" குடியிருப்பு. முருகானந்தம் மனதிற்குள் சலித்திக்கொண்டே வீராணம் தண்ணிய கொடுவர குழாய் கொண்டுவந்து அந்த இடத்துல போட்டாங்க, அப்புறம் அந்த வேலைய கெடப்புல போட்டுட்டாங்க. பக்கத்து குடிசைல இருந்த சனங்க எல்லாம் 6 மாசத்துக்கு முன்னால வந்த வெள்ளத்துக்கு அப்புறம் அந்த குழாய் லையே குடியிருக்க அரம்பிச்ட்டாங்க. குழாய்க்கு நம்பரெல்லாம் போட்டிருக்கும். post office ல இருந்து லெட்டர் எல்லாம் கூட சரியா வந்திரும்னு சொல்றாங்க. ரேஷன் கார்ட்க்கு கூட மனு போட்டிருக்காங்க!
சரவணன் தன்னுடன் இரண்டு contable படை சூழ "குலாய்" குடியிருப்புக்கு விரைந்தார்.

காலை 06:45 மணி...


சரவணன, குறுக்கும் மறுக்குமாக கிடத்தப்பட்ட குழாய்களை பார்வையிட்டார், அந்த வரிசையில் கடைசியாக இருந்த குழாயை அருகில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். 

சுமாராக 10 அடி நீளமுள்ள குழாயின் உள்புறம் ஒரு உருவம் தெரிந்தது.  மேகங்கள் சூரியனுக்கு கருப்பு கொடி காட்டி மொத்த வெளிச்சத்தையும் தடை செய்தன. ஜீப்பில் இருந்த டார்ச் சை கொண்டு வரச்சொன்னார் சரவணன். அடுத்த நொடி டார்ச் திருப்பதியிடம் இருந்து கை மாறியது.

கருஞ்சிவப்பில் குழாயின் வாயில் வழிந்து உறைந்த ரத்தம் உடலுக்கு வழி காட்டியது. தான் பார்ப்பதை மனதில் பதித்துக்கொண்டார் சரவணன்.
  • முழுவதும் ஆடை நீக்கப்பட்ட உடல்.
  • சிவந்த மேனி வண்ணம்
  • சரமாரியாக வெட்டப்பட்டு உருக்குலைக்கப் பட்ட முகம். 
  • கழுத்தில் ஆழமான வெட்டு. 
  • உடலின் இன்ன பிற அவயங்களின் கோரம் (அவள் வன் புணர்ச்சிக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை உறுதி படுத்தியது).
  • இடுப்பில் பிரவிக்குறியீடு.

அங்கே நின்று கொண்டிருந்தவரிடம்  திருப்பதி கேட்டார், நீங்கதான் போன் பண்ணதா? நான் தான் சார் என்று அந்த 45 வயது மதிக்கத்தக்கவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

உங்க பேர் என்ன ?

   சுப்பிரமணி...

எப்போ பார்த்தீங்க?

    06:00 மணிக்கு, பார்த்த உடனே போன் பண்ணிட்டேன் சார்.

வேற யாராவது இருந்தங்களா?

     நான் யாரயும் பாக்கல சார்.

உங்க வீடு எங்க இருக்கு, இங்க எதுக்காக வந்தீங்க?

     நான் "tailor" சார், நான் அந்த மொத குழாய் லதான் இருக்கேன்.

சொந்த ஊர் எது?

     விருதுநகர், ஆனா இங்கவந்து 15 வருசத்துக்கு மேல ஆகுது சார்.

முருகானந்தம், இவருகிட்ட statement ல கையெழுத்து வாங்கிக்கோங்க.  "சுப்பிரமணி" station ல இருந்து எப்போ கூப்ட்டாலும் வரணும் என்று திருப்பதி தன் விசாரணையை ஆரம்பித்தார். 

குழாயின் பின்புறம் சென்று எதாவது தடயம் கிடைக்குதாவென தேடுதலை தொடர்ந்தார் சரவணன். நேற்றிரவு மழை நீரை உண்டு உறங்கிய நிலத்தின் மேல்பரப்பில் இறங்கிய சில காலடித்தடங்கள் அல்லது தடையங்கள்.  திருப்பதி உடனே இந்த காலடித்தடங்கள தடயவியலுக்கு அனுப்புங்க, ground pressure ரிப்போர்ட் வாங்கிடுங்க.

 போட்டோ கிராபர் வந்தாச்சா? 
         வந்துட்டாருங்க அய்யா.

இந்த இடத்த மார்க் பண்ணிட்டு போட்டோ எடுத்துருங்க,    
         சரிங்க அய்யா.

போட்டோ கிராபர் பவ்யமாக சரவணனுக்கு வணக்கம் வைத்து விட்டு, கேமரா வை கிளிக்கினார். படம் பதிய மறுத்தது. மீண்டும் முயற்சித்தார், மீண்டும் மறுத்தது.

என்ன ஆச்சு?  சரவணனின் குரலுக்கு என்ன சொல்வதென தெரியாமல் போட்டோ கிராபர் விழித்தார். சுதாரித்துக்கொண்டு, ஒன்னும் இல்லைங்கையா மெமரி கார்டு புல் போல தெரியுது. வரும்போது கிளீன் பண்ணிட்டுத்தான் வந்தேன். இதோ முடிஞ்சிரும் சார்.

போட்டோ கிராபர் தனக்கு தெரிந்த எல்லா யுத்திகளையும் உபயோகித்தும் பயன் இல்லை. மெமரி புல் என்றே சொல்லியது கேமரா. ஆனால் ஒரு போட்டோ கூட இல்லை. வேற கார்ட்டும் இல்ல.

மெமரி கார்ட்டை வாங்கிய சரவணன், தன்னுடைய ஆதாம் மடிக்கணியை எடுத்தார். இவ்வாறாக அடித்தார் 

$ cd /Volumes/canon/

$ ls -la

$ rm -r .Trashes

மெமரி கார்டு முற்றிலும் சுத்தம் செய்யப்பட்டது. ஆச்சர்யம் கலந்த நன்றியை தெரிவித்து விட்டு போட்டோ கிராபர் தன் வேலையை தொடர்ந்தார்.அய்யா பி.இ  கம்ப்யூட்டர் படிச்சிட்டு போலீஸ் வேலைக்கு வந்திருக்காங்க என்று திருப்பதி போட்டோ கிராபரின் சந்தேகத்தை தெளிவு படுத்தினார்.


முருகானந்தம், நீங்க நியூஸ் பேப்பர்க்கு ரிப்போர்ட் குடுத்திருங்க. இந்த பொண்ண பத்தின ரிப்போர்ட் எல்லா போலீஸ் ஸ்டேஷன்க்கும் அனுப்பிடுங்க. யாராவது பொண்ண காணோம்னு கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கங்களான்னு விசாரிங்க.

சரவணனுக்கு salute அடிதித்து விட்டு ஆணையை நிறைவேற்ற கிளம்பினார் முருகானந்தம்.


திங்கள்

காலை  08:00 மணி

கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் இருந்து கந்தன் சாவடி காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு...

முருகானந்தம், நான் ஏட்டு குமார் பேசுறேன், ஒரு பொண்ண காணோம்னு கேஸ் வந்திருக்கு. பொண்ணுக்கு வயசு 24, உயரம் சுமார் 5.6". நிறம் சிவப்பு. நீங்க  அனுப்பின ரிப்போர்ட் கூட மேட்ச் ஆகுது.

பொண்ணு பேரென்ன குமார்?
     சந்தியா...


அடுத்த  அழைப்பு ...