cookie

Thursday, July 26, 2012

அ(கொ)லை பேசி

1. யார் அவள் ?

ஞாயிறு 

காலை 06:00 மணி...


சென்னைக்கு அருகில் உள்ள குழாய் குடியிருப்பு பகுதியில் இருந்து 
கந்தன் சாவடி  காவல் நிலையத்திற்கு அவசர  தொலைபேசி அழைப்பு வந்தது.

Constable முருகானந்தம் விலாசத்தை குறித்துக்கொண்டு, யார்கிட்டயும் சொல்லவேண்டாம் குறிப்பா கூட்டத்தை கூட்டிரவேண்டம்.அங்கேயே இருங்க நாங்க உடனே வர்றோம் என்று கூறி Phone receiver ரை விடுதலை செய்தார். அப்போது சரியாக உள்ளே வந்த inspector சரவணனிடம்(சரவணன் புதிதாக தமிழ்நாட்டின் தென் பகுதியில் இருந்து  சென்னைக்கு மாற்றலாகி வந்தவர்) , அய்யா, "குழாய்" குடியிருப்பு பகுதில எதோ ஒரு பொணம் கெடக்குதுன்னு போன் வந்தது.

சரவணன் கேட்டார், என்னையா அது  "குலாய்" குடியிருப்பு. முருகானந்தம் மனதிற்குள் சலித்திக்கொண்டே வீராணம் தண்ணிய கொடுவர குழாய் கொண்டுவந்து அந்த இடத்துல போட்டாங்க, அப்புறம் அந்த வேலைய கெடப்புல போட்டுட்டாங்க. பக்கத்து குடிசைல இருந்த சனங்க எல்லாம் 6 மாசத்துக்கு முன்னால வந்த வெள்ளத்துக்கு அப்புறம் அந்த குழாய் லையே குடியிருக்க அரம்பிச்ட்டாங்க. குழாய்க்கு நம்பரெல்லாம் போட்டிருக்கும். post office ல இருந்து லெட்டர் எல்லாம் கூட சரியா வந்திரும்னு சொல்றாங்க. ரேஷன் கார்ட்க்கு கூட மனு போட்டிருக்காங்க!
சரவணன் தன்னுடன் இரண்டு contable படை சூழ "குலாய்" குடியிருப்புக்கு விரைந்தார்.

காலை 06:45 மணி...


சரவணன, குறுக்கும் மறுக்குமாக கிடத்தப்பட்ட குழாய்களை பார்வையிட்டார், அந்த வரிசையில் கடைசியாக இருந்த குழாயை அருகில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். 

சுமாராக 10 அடி நீளமுள்ள குழாயின் உள்புறம் ஒரு உருவம் தெரிந்தது.  மேகங்கள் சூரியனுக்கு கருப்பு கொடி காட்டி மொத்த வெளிச்சத்தையும் தடை செய்தன. ஜீப்பில் இருந்த டார்ச் சை கொண்டு வரச்சொன்னார் சரவணன். அடுத்த நொடி டார்ச் திருப்பதியிடம் இருந்து கை மாறியது.

கருஞ்சிவப்பில் குழாயின் வாயில் வழிந்து உறைந்த ரத்தம் உடலுக்கு வழி காட்டியது. தான் பார்ப்பதை மனதில் பதித்துக்கொண்டார் சரவணன்.
  • முழுவதும் ஆடை நீக்கப்பட்ட உடல்.
  • சிவந்த மேனி வண்ணம்
  • சரமாரியாக வெட்டப்பட்டு உருக்குலைக்கப் பட்ட முகம். 
  • கழுத்தில் ஆழமான வெட்டு. 
  • உடலின் இன்ன பிற அவயங்களின் கோரம் (அவள் வன் புணர்ச்சிக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை உறுதி படுத்தியது).
  • இடுப்பில் பிரவிக்குறியீடு.

அங்கே நின்று கொண்டிருந்தவரிடம்  திருப்பதி கேட்டார், நீங்கதான் போன் பண்ணதா? நான் தான் சார் என்று அந்த 45 வயது மதிக்கத்தக்கவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

உங்க பேர் என்ன ?

   சுப்பிரமணி...

எப்போ பார்த்தீங்க?

    06:00 மணிக்கு, பார்த்த உடனே போன் பண்ணிட்டேன் சார்.

வேற யாராவது இருந்தங்களா?

     நான் யாரயும் பாக்கல சார்.

உங்க வீடு எங்க இருக்கு, இங்க எதுக்காக வந்தீங்க?

     நான் "tailor" சார், நான் அந்த மொத குழாய் லதான் இருக்கேன்.

சொந்த ஊர் எது?

     விருதுநகர், ஆனா இங்கவந்து 15 வருசத்துக்கு மேல ஆகுது சார்.

முருகானந்தம், இவருகிட்ட statement ல கையெழுத்து வாங்கிக்கோங்க.  "சுப்பிரமணி" station ல இருந்து எப்போ கூப்ட்டாலும் வரணும் என்று திருப்பதி தன் விசாரணையை ஆரம்பித்தார். 

குழாயின் பின்புறம் சென்று எதாவது தடயம் கிடைக்குதாவென தேடுதலை தொடர்ந்தார் சரவணன். நேற்றிரவு மழை நீரை உண்டு உறங்கிய நிலத்தின் மேல்பரப்பில் இறங்கிய சில காலடித்தடங்கள் அல்லது தடையங்கள்.  திருப்பதி உடனே இந்த காலடித்தடங்கள தடயவியலுக்கு அனுப்புங்க, ground pressure ரிப்போர்ட் வாங்கிடுங்க.

 போட்டோ கிராபர் வந்தாச்சா? 
         வந்துட்டாருங்க அய்யா.

இந்த இடத்த மார்க் பண்ணிட்டு போட்டோ எடுத்துருங்க,    
         சரிங்க அய்யா.

போட்டோ கிராபர் பவ்யமாக சரவணனுக்கு வணக்கம் வைத்து விட்டு, கேமரா வை கிளிக்கினார். படம் பதிய மறுத்தது. மீண்டும் முயற்சித்தார், மீண்டும் மறுத்தது.

என்ன ஆச்சு?  சரவணனின் குரலுக்கு என்ன சொல்வதென தெரியாமல் போட்டோ கிராபர் விழித்தார். சுதாரித்துக்கொண்டு, ஒன்னும் இல்லைங்கையா மெமரி கார்டு புல் போல தெரியுது. வரும்போது கிளீன் பண்ணிட்டுத்தான் வந்தேன். இதோ முடிஞ்சிரும் சார்.

போட்டோ கிராபர் தனக்கு தெரிந்த எல்லா யுத்திகளையும் உபயோகித்தும் பயன் இல்லை. மெமரி புல் என்றே சொல்லியது கேமரா. ஆனால் ஒரு போட்டோ கூட இல்லை. வேற கார்ட்டும் இல்ல.

மெமரி கார்ட்டை வாங்கிய சரவணன், தன்னுடைய ஆதாம் மடிக்கணியை எடுத்தார். இவ்வாறாக அடித்தார் 

$ cd /Volumes/canon/

$ ls -la

$ rm -r .Trashes

மெமரி கார்டு முற்றிலும் சுத்தம் செய்யப்பட்டது. ஆச்சர்யம் கலந்த நன்றியை தெரிவித்து விட்டு போட்டோ கிராபர் தன் வேலையை தொடர்ந்தார்.அய்யா பி.இ  கம்ப்யூட்டர் படிச்சிட்டு போலீஸ் வேலைக்கு வந்திருக்காங்க என்று திருப்பதி போட்டோ கிராபரின் சந்தேகத்தை தெளிவு படுத்தினார்.


முருகானந்தம், நீங்க நியூஸ் பேப்பர்க்கு ரிப்போர்ட் குடுத்திருங்க. இந்த பொண்ண பத்தின ரிப்போர்ட் எல்லா போலீஸ் ஸ்டேஷன்க்கும் அனுப்பிடுங்க. யாராவது பொண்ண காணோம்னு கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கங்களான்னு விசாரிங்க.

சரவணனுக்கு salute அடிதித்து விட்டு ஆணையை நிறைவேற்ற கிளம்பினார் முருகானந்தம்.


திங்கள்

காலை  08:00 மணி

கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் இருந்து கந்தன் சாவடி காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு...

முருகானந்தம், நான் ஏட்டு குமார் பேசுறேன், ஒரு பொண்ண காணோம்னு கேஸ் வந்திருக்கு. பொண்ணுக்கு வயசு 24, உயரம் சுமார் 5.6". நிறம் சிவப்பு. நீங்க  அனுப்பின ரிப்போர்ட் கூட மேட்ச் ஆகுது.

பொண்ணு பேரென்ன குமார்?
     சந்தியா...


அடுத்த  அழைப்பு ...




9 comments:

  1. Ada de!!! items i came across as i read it


    சரவணன் கேட்டார், என்னையா அது "குலாய்" ithu enna then mavatta slanga..

    வழிந்து உறைந்த ரத்தம் உடலுக்கு வழி காட்டியது. - good good

    இடுப்பில் பிரவிக்குறியீடு. - Shelock Holmes pola iruku

    நேற்றிரவு மழை நீரை உண்டு உறங்கிய நிலத்தின்

    கேமரா வை கிளிக்கினார். படம் பதிய மறுத்தது. மீண்டும் முயற்சித்தார், மீண்டும் மறுத்தது. - SPOOOOOKY

    ஆதாம் மடிக்கணியை - Avarum apple thana ?

    அடுத்த அழைப்பு ...kaga waiting. Worth waiting :)

    ReplyDelete
  2. நன்றி நண்பரே, உங்களுடைய பின்னூட்டம் என்னுடைய எழுதும் ஆர்வத்தை அதிகரிப்பதாக உள்ளது.

    சிறப்பு "ழ", பெரும்பாலும் தென் மாநிலத்திற்கு தகராறுதான்.

    "ஆதாம் மடிக்கணி" தான் அதரமே!

    ReplyDelete
  3. It is good and suspense. Learned some good tamil words. Hats off Arun!

    ReplyDelete
  4. Replies
    1. நன்றி ராஜா, நீங்க இத படிக்கிறதே எனக்கு மகிழ்ச்சியா இருக்கு...

      Delete
  5. after a long time read a tamil crime story...

    Building the story in my mind for the next episode which shows I read a interesting crime story with good tamil words(atleast from my knowledge)

    The only thing I don't understand is, inspector ஆதாம் மடிக்கணி, Do you think our TN Police carry these kind of devices especially apple...May be you may have some logical connection in the next episode...

    waiting waiting...post the next epidsode soon...

    ReplyDelete
  6. நன்றி சாகுல், கண்டிப்பாக கதை ஓட்டம் உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கும்...

    ReplyDelete
  7. Rajkumar SubramanianJuly 27, 2012 at 8:00 PM

    வீராணம் தண்ணிய கொடுவர குழாய்...
    இரண்டு contable படை சூழ...
    போன்ற சிறு எழத்து பிழைகளை தவிர்த்து... நல்ல மர்ம நாவல் படித்த அனுபவம்!
    வீட்டு படம் (Home Work) செய்திருப்பது நன்கு தெரிகிறது.
    தக்க வைக்கவும்.

    ReplyDelete
  8. நன்றி ராஜ்,
    எழுத்துப் பிழைக்கு காரணம் அவசரம் தான், முடிந்தவரை பிழை இல்லாம பாத்துக்கிறேன்...

    ReplyDelete