cookie

Saturday, August 4, 2012

அ(கொ)லை பேசி - பாகம் 3

திங்கள் இரவு 9 மணி சரவணனின் வீடு...

சந்தியா வழக்கு குறித்த குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார், அப்போது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது, வாசலில் திருப்பதி. கதவை திறந்து அவரை உள்ளே அழைத்து விட்டு வந்தார். 

என்ன விசயமா வந்தீங்க திருப்பதி?
         உங்கள பார்த்துட்டு போலாம்னு, உங்ககிட்ட ஒரு பர்சனல் விஷயம் கேட்கலாமா? 
                    தயங்காம சொல்லுங்க
         Hospital அந்தம்மா கிட்ட பேசும் போது பார்த்தேன், நீங்க இந்த கேஸ்ச ரொம்ப பர்சனல்லா எடுத்துக்கிட்டீங்க போல தெரியுது.              
                    மௌனம்
         தப்பா கேட்டிருந்தா மன்னிச்சிருங்கய்யா, எனக்கு கேட்கனும்னு தோணிச்சி அதான் கேட்டேன். இதுக்கு முன்னால இருந்த இன்ஸ்பெக்டர் யாரும்  எங்ககிட்ட இவ்வளவு நல்லவிதமா நந்துக்கிட்டது இல்ல. அது உங்க மேல ஒரு பெரிய மரியாதைய கொடுத்திருக்கு.

கொஞ்சம் disturb ஆயிட்டேன் மத்தபடி வேற ஒன்னும் இல்ல திருப்பதி, அப்புறம் என்மேல நீங்க எல்லாரும் வச்சிருக்கிற அன்புக்கும் மரியாதைக்கும் நன்றி.  உங்களுக்கு டைம் இருந்தா வாங்க சந்தியா கேஸ் பத்திதான் நோட்ஸ் எடுத்துக்கிட்டு இருக்கேன். 

இருவரும் குறிப்புகளில் உறைந்தனர்.

  பொண்ணு இறந்து கிடந்தது, sunday       
   hostel ல விட்டு போனது saturday evening 
   college பேரென்ன?  கலைமகள் இல்லையா? 
             ஆமாங்கய்யா

இந்த college பத்தி தெரியுமா?
      தெரியும் அய்யா.
      கூடுவாஞ்சேரிக்கும், ஊரப்பக்கத்துக்கும் இடைல இருக்கு. ரோட்ல இருந்து 5 km உள்ள போகணும். பொண்ணுங்க மட்டும் படிக்கிற நர்சிங் காலேஜ். காலேஜ் correspondent lady பெரிய அரசியல் புள்ளி. ரொம்ப strict டான காலேஜ், என் friend பொண்ணுக்கு அங்கதான் admission வாங்க try பண்ணங்க ஆனா கண்டிப்பா hostel ல சேர்ந்துதான் படிக்கணும்னு சொல்லிட்டதுனால வேற college ல சேர்த்துட்டாங்க. 

Ladies college
hostel ல தான் இருக்கணும். 
வெளி உலக தொடர்பே கிடையாது. 

அப்போ வெளிய யார்கூட பேசணும், பழகனும்னா ஒரே option phone தான். அந்த college ல cell phone allow பண்றாங்களா திருப்பதி?    
        தெரியாதுங்கய்யா...

  அந்தம்மா கொடுத்த complaint ட பாருங்க, அந்த பொண்ணு கிட்ட cell போன் இருந்ததா?
             .....   இலங்கையா

  அந்தம்மாவோட பேச எதாவது நம்பர் இருக்கா?
             பக்கத்து கடை நம்பர் இருக்கு.

   நாளைக்கு காலைல அந்த காலேஜ்க்கும், hostel க்கும் போய் விசாரிக்கணும்.    

சரி நேரம் ஆகுது நீங்க வீட்டுக்கு போங்க காலைல சீக்கிரமா வேலைய ஆரம்பிக்கணும். வணக்கம் வைத்து விட்டு வீடு திரும்பினர் திருப்பதி. 

செவ்வாய் காலை 08:00  மணி 

கலைமகள் கல்லூரி மாணவிகள் விடுதி... 

தொலைபேசி சினுங்கியது எடுத்து அரவணைத்தார் ஆறுதலாக hello சொன்னார் துணை காப்பாளர்.  மறுமுனையில் சரவணன். சுருக்கமாக சந்தியா குறித்து விசாரிக்க வேண்டும் என்றார். காப்பாளர் மற்றும் முதல்வர் அனுமதி பெற்றுவிட்டு  மீண்டும் அழைப்பதாக தெவித்தார். பின்னர் சரவணன் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டார்.  

கருப்பு கண்ணாடி, பெண்கள் அணியும் மேலுடை போல உடலை இருக்கிய பனியன் இப்படி இல்லாமல், நாகரீகமான  மாற்று  உடையில்  சரவணன் மற்றும் திருப்பதியும் துணை காப்பாளர் அறையில்.

வணக்கம் madam, இவரு constable திருப்பதி , நான் inspector சரவணன்       
       வணக்கம் inspector, உங்களுக்கு என்ன information வேணும்னு சொல்லுங்க, எனக்கு தெரிஞ்சது எல்லாம் சொல்றேன்.

Thanks madam, சந்தியா பத்தி சொலுங்க.
        நல்ல பொண்ணு, நல்லா படிக்கிற பொண்ணும் கூட, கொஞ்சம் moody type. மத்தபடி special லா சொல்றமாதிரி எதுவும் இல்ல.

Close friends யாரு
        close friends னு யாரும் இல்ல, recently அஞ்சலி அவளோட room ல join பண்ணதுல இருந்து. கொஞ்ச நாளா "அஞ்சலி" கூட இருக்குறத பாத்திருக்கேன். 

இந்த அஞ்சலி கூட பேசலாமா?
       தாராலமா, evening class முடிஞ்சதும் பேசலாம்.

சந்தியா Saturday evening கிளம்பி போயிட்டதா?
      yes sir, அவங்க வீட்ல இருந்து phone வந்தது. ஏதோ family function னு சொன்னங்க.

யார் call பண்ணாங்க?
     அவங்க அம்மா தான், usually இந்த மாதிரி call வந்தா, application form ல அவங்க கொடுத்த number க்கு நாங்க மறுபடியும் call பண்ணி confirm பண்ணுவோம். அவங்க அம்மா கிட்ட பேசினதே நான் தான்.

நீங்க பேசினது அவங்க அம்மா கிட்ட தான்னு எப்படி சொல்றீங்க?
      அவங்க application ல கொடுத்த number க்கு call பண்ணேன், ஒரு வயசான lady பேசுனாங்க.   

உங்க college ல students க்கு mobile phone allowed டா?
     allowed

சந்தியா கிட்ட போன் இருந்ததா?
    இல்ல, அவங்க அம்மா office க்கு தான் phone பண்ணுவாங்க.

thanks madam, அஞ்சலி கிட்ட வேற எதுவும் சொல்ல வேண்டாம் evening நாங்க வந்து பேசிக்கிறோம். evening எத்தன மணிக்கு பேசலாம்.
    between 5 and 7 

சந்தியா போட்டோ இருக்கா?
      permission வாங்கிட்டு, evening நீங்க வரும்போது தர்றேன்.

திருப்பதி, சந்தியா அம்மா சொன்னதுக்கும், இவங்க சொல்றதுக்கும் connection சரியா இல்லையே. சந்தியா அம்மாகிட்ட உடனே பேசனும், அந்த கடை phone number அவங்க கொடுத்த complaint ல இருக்குள்ள?
      இருக்குது அய்யா.

கடையில் பணிபுரியும் நபர், மீண்டும் 5 நிமிடம் கழித்து phone செய்யும் படி கூறினார்.அடுத்த அழைப்பிற்கு ஆஜரானார் சந்தியாவின் தாய்.

இப்போ பேசலாமா என்ற சரவணனின் கேள்விக்கு சம்மதித்தார்.

இப்போதான் சந்தியா college க்கு போய் பேசிட்டு வந்தேன். அவங்க sub warden சொன்னாங்க, சனிக்கிழம உங்க கிட்ட பேசிட்டு தான் பொண்ண அனுப்பிச்சதா.           
           இல்ல sir, நான் பேசல. college ல என் cell போன்னு நம்பர் தான் குடுத்துருந்தேன். அத 4 நாளா காணோம்.

என்ன சொல்றீங்க? cell phone 4 நாளா காணோமா? 
           ஆமா sir, காணாம போனதுக்கு அப்பறம், அந்த போனுக்கு பேசுனேன், யாரோ ஒருத்தன் எடுத்து பேசுனான். பஸ்ல கிடந்துச்சுன்னு சொன்னான்.  ஊருக்கு போய்கிட்டு இருந்தானாம், அதனால ரெண்டு நாள்ள திரும்ப வரும்போது குடுக்கிறதா சொன்னான் sir.

அவன் பேர் சொன்னனா?
          எதோ சொன்னான் sir, ஞாபகம் இல்ல. கண்டிப்பா குடுத்துர்றேன் ரொம்ப நம்பிக்கையா சொன்னான்.

உங்க cell numbar சொல்லுங்க 
ஒன்பது, எட்டு  என்று பத்திலக்க என்னை கூறினார். அதை குறித்துக் கொண்டார் சரவனணன்.

திருப்பதி, cell phone சாதாரணமா காணாம போகல, அதுக்கு பின்னால ஏதோ master plan இருக்குற மாதிரி தோணுது. நீங்க முருகானந்தம் கிட்ட சொல்லி இந்த அம்மா வோட phone current location கண்டு பிடிக்க சொல்லுங்க. கண்டிப்பா switch off பண்ணியிருப்பான் இருந்தாலும் try பண்ணுங்க.
     சரிங்கய்யா      

சிறிது நேரம் கழித்து, முருகானந்தம், சரவணனின் யூகத்தை உறுதி செய்தார்.     

மாலை 5 மணி

     சரவணனும், துணை காப்பாளரும் உள்ளே நுழைய, அஞ்சலி துணை காப்பாளர் அறையில் தன்னை காண யார் வருகிறார்கள் என்று தெரியாமல் காத்திருந்தார்.அஞ்சலி, இவர் Mr. சரவணன். இவர்தான் உன்ன பார்க்கனும்னு சொன்னாரு. என்று இருவரும் அங்கு அமர்ந்தனர்.

மேடம், if you dont mind, நாங்க அஞ்சலியை  தனியா விசாரிக்கணும்.
      no problem sir  
 துணை காப்பாளர், தன் அறையை விட்டு நீங்கினார்.

Ms Anjali நாங்க போலீஸ், சந்தியா காணாம போனது பத்தி விசாரிக்க வந்திருக்கோம், உங்களுக்கு தெரிஞ்சத மறைக்காம சொல்லுங்க. நீங்க சொல்ற எந்த தகவலும் எங்களுக்கு உபயோகமா இருக்கும்.
    Sure sir கண்டிப்பா எனக்கு தெர்ஞ்ச எல்லாம் சொல்றேன்,   

நீங்களும் சந்தியாவும் close friends சா?
      ரொம்ப close இல்ல sir, நான் recent டா தான் அவ room க்கு shift ஆனேன். அவ கொஞ்சம் moody type.    
உங்களுக்கு தெரிஞ்சி சந்தியாவுக்கு யாராவது boy friend?
     இல்ல sir, எனக்கு தெரிஞ்சி யாரும் இல்ல.

Saturday அவங்க போகும் போது உங்க கிட்ட எதாவது சொன்னாங்களா?       
    no sir, நான் வேற friend room ல இருந்தேன். night தான் எனக்கு தெரியும்.

நீங்க வேற எதாவது சொல்லனுமா?
     இதுக்கு மேல எனக்கு வேற எதுவும் தெரியாது.

Thanks Ms அஞ்சலி, உங்கள disturb பண்ணதுக்கு sorry     
    Its O.K sir என்று கூறிவிட்டு, தன்னுடைய அறையை நோக்கி நடந்தார் அஞ்சலி.

உங்களுக்கு என்ன தோணுது திருப்பதி.
    அந்த பொண்ண வேற மாதிரி விசாரிக்கணும்னு தோணுது அய்யா.

சரவணன், எதையோ யோசித்தவாறு தலையை மட்டும் மேலும் கீழும் அசைத்தார். அஞ்சலி சென்றவுடன் துணை காப்பாளர் உள்ளே நுழைந்தார்.

என்ன sir சீக்கிரமா முடிச்சிட்டீங்க போல?
     ஆமா மேடம், இந்த அஞ்சலிக்கு சந்தியா பத்தி ரொம்ப தெரியல.

எனக்கு அஞ்சலியோட mobile நம்பர் வேணும். இது off the record தான், அந்த பொண்ணுக்கு வேற எந்த problem வராம நான் பாத்துக்கிறேன்.
     Sure sir   

நீங்க எங்க கிட்ட நம்பர் கொடுத்தத அஞ்சலி கிட்ட சொல்ல வேணாம்.
      O.K Sir 
      one minute சந்தியா photo, அஞ்சலி mobile number ரெண்டும் தர்றேன்.  

திருப்பதி, அஞ்சலிக்கு last 3 months call details வேணும், both incoming and outgoing. 
     உடனே ஏற்பாடு பண்றேன் அய்யா.     


புதன் காலை 10 :00 மணி  

கந்தன்சாவடி காவல் நிலையம் 

முருகானந்தம், அஞ்சலியோட call details வந்துருச்சா?
        வந்தாச்சி அய்யா, நீங்க கேட்ட மாதிரியே CD ல குடுத்துருக்காங்க.

மடிக்கணினியில் அனைத்தையும் நகலெடுத்துக் கொண்டார். அடிக்கடி வந்த அழைப்புகளை தேடினார். இரண்டு எண்கள் தவிர எதுவும் கடந்த மூன்று மாதங்களில் மீண்டும் மீண்டும் வரவில்லை.  அந்த இரண்டு எண்களும் அஞ்சலியின் பெற்றோர் எண்கள். அதிலும்  பெரும்பான்மையான அழைப்புகள் தொலைபேசியில் இருந்து (mobile phone அல்ல) வந்துள்ளன.

       அய்யா, எனக்கு ஒரு doubt என்று ஆரம்பித்தார் முருகானந்தம்.   

கேளுங்க,

      அஞ்சலியோட call details ல நமக்கு என்ன கிடைக்கும் அய்யா.

உறுதியா எதுவும் சொல்ல முடியாது, ஆனா எனக்கு ஒரு hunch, எல்லாத்துக்கும் ஒரு connection கண்டிப்பா இருக்கும். அது மட்டும் இல்லாம, சந்தியா கிட்ட mobile இல்ல, அஞ்சலி தவிர friends யாரும் இல்ல, எந்த ஒரு personal communication க்கும் அஞ்சலி தான் ஒரே option   

     அய்யா, சந்தியாவ யாரோ கடத்திட்டு போயி இப்படி பண்ணியிருந்தா?

அதுக்கு வாய்ப்பு ரொம்ப குறைவு தான், ஏன்னா
  • Phone ல சந்தியா அவங்க அம்மா கிட்ட பேசினதா sub warden சொன்னங்க, அப்படி சந்தியா அவங்க அம்மா கிட்ட பேசியிருந்தா கண்டிப்பா அந்த பொண்ணு ஊருக்கு போய் இருக்காது. பொண்ணு பாக்குறதுல சந்தியாவுக்கு உடன்பாடு இல்லனு அவங்க அம்மாவே சொன்னங்க .
  •  ரொம்ப முக்கியம், அவங்க அம்மாவோட mobile இந்த
    incident க்கு முன்னாலையே தொலைஞ்சி போச்சி அல்லது திருடு போச்சி.

அதனால சந்தியா சம்மதிச்சிதான் Saturday evening போயிருக்குது. hostel verification protocol ல break பண்றதுக்கு, சந்தியா அம்மாவோட phone னை, plan பண்ணிதான் யாரோ எடுத்திருக்காங்க.  எனக்கு இப்ப open question னா இருக்குறது "எதுக்காக திடீர்னு அஞ்சலி சந்தியாவோட room ல join பண்ணனும்"? இது சாதாரணமாவும் நடந்திருக்கலாம் அல்லது அவங்களோட plan ஆகவும் இருக்கலாம். அப்படி சந்தியா சம்மதிச்சி போய் இருந்தா கண்டிப்பா அதுபத்தி அஞ்சலிக்கு தெரிச்சிருக்கும். 

என்று முருகானந்தத்தின் சந்தேகத்தை தெளிவு செய்து விட்டு அஞ்சலியின் அலைபேசிக்கு வந்த அழைப்பு எண்களுடன் விளையாட  ஆரம்பித்தார்.

இடது மூளை பேச்சை நிறுத்தியதால், சரவணனின் வலது மூளை தன் செயல்பாட்டை துரிதமாக தொடங்கியது. 

கிட்டத்தட்ட எல்லார் கிட்டயும் mobile phone இருக்கும் போது ஏன் அஞ்சலிக்கு landline ல இருந்து இவ்வளவு calls வந்திருக்கு? என்று தன்னுக்குள் கேட்டுக்கொண்டு அழைப்பு எண்களில் இருந்த வெளியூர் குறியீடு எண்களை மட்டும் பிரித்து எடுத்தார். அந்த குறியீடு எண்களுக்கு செந்தமான ஊர்களை  தனியே எடுத்து அழைப்பு வந்த தேதி வரியாக வரிசை படுத்தினார்.


Thoothukudi
461
 TIRUNELVELLI 
462
 VIRUDHUNAGAR 
4562
 DINDIGUL 
451
 TRICHY 
431
 VILLUPURAM 
4146
 Chennai    
44


























இந்த அழைப்புகளின் பயணம், குறப்பிட்ட கால இடைவெளியில் நிகழ்ந்து கொண்டே இருந்திருக்கிறது. பின்பு இதே பயணம் மற்ற மாநிலங்களில் தொடர்கிறது.  

உடனே இந்த தொலைபேசி எங்களுக்கு  செந்தக்காரர்களின் பட்டியலை கேட்டார் சரவணன். சந்தேகமே இல்லாமல் அனைத்து அழைப்புகளும்  அனாதைகளாகவே இருந்தன, அனைத்தும் பொது தொழைபேசி சாவடி எண்கள்.

திருப்பதி, இந்த போன் numbers இருக்குற இடங்கள்ள உள்ள police station க்கு information பண்ணி பக்கத்துல உள்ள lodge விசாரிக்க சொல்லுங்க. இந்த தேதிகள்ல அங்க தங்கினவங்க details collect பண்ண சொல்லுங்க. 
       சரிங்கய்யா.

அடுத்த மூன்றாம் மணி,  கீழ்கண்ட  விவரங்கள் சரவணனின் கணினிக்குள்...

        பெயர்: சந்தோஷ் 
        வயது: 33  
        முகவரி:  .....
        எதற்காக இங்கே தங்கினார்:  மருத்துவ பிரதிநிதியாக இருக்கலாம்

        அருகில் இருந்த Doctor களிடம் விசாரித்ததில், அவர் வேலை செய்யும்  கிண்டியில் உள்ள  RGC  மருந்து  நிறுவனத்தின் முகவரி கிடைத்தது.

        RGC: தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான மருந்து நிறுவனம்.

Dr கேசவனின் அலைபேசி, RGC தொலைபேசியை நாடிக்கொண்டிருந்தது, இணைப்பு கிடைத்தவுடன். 

நான் Dr கேசவன்,  Mr .சந்தோஷ்கிட்ட last week வந்து கொஞ்சம் samples கொடுத்தார் அதபத்தி பேசணும் என்றார் மறுமுனையில் அந்த பெண் Dr கூறிய விவரங்களை உறுதி படுத்தி விட்டு,  
        சந்தோஷ் இல்ல, வெளிய போயிருக்கார். 2 hrs அப்புறம் call பண்ணுங்க என்றார்.

கொஞ்சம் urgent, உடனே பேசணும்.அவரோட business card என்கிட்டே இல்ல அவரோட mobile நம்பர் செல்றீங்களா?
        Sure Dr ,     

number வாங்கிக்கொண்ட Dr, சந்தோஷ்க்கு phone செய்தார்.

சந்தோஷ்,  நான் Dr கேசவன் பேசுறேன், உங்கள இப்ப உடனே பார்க்க முடியுமா?
        Sorry, Dr நான் இப்போ meeting ல இருக்கேன். 1 hr ல நானே கால் பண்றேன்.

சந்தோஷ் நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க நானே வர்றேன்.
        Guindy, hotel Royal ல இருக்கேன். 

 O.K சந்தோஷ்   
சந்தோஷின் அலைபேசி என்னை வாங்கிக் கொண்டு, Doctor க்கு நன்றி கூறிவிட்டு வெளியேறினர் சரவணன்.

முருகானதம், இந்த number ரோட last 2 months call details உடனே வேணும். அப்புறம் future call details கூட தேவைப்படும். 
        உடனே ஏற்பாடு பண்றேன் அய்யா.

சரவணனும், திருப்பதியும் royal லில், 

திருப்பதி தூரத்துல இருந்து monitor பண்ணுங்க, நான் உங்களுக்கு signal தந்த பிறகு follow பண்ணுங்க.
       சரிங்க அய்யா. 

சந்தோஷ் meeting முடிந்து வெளியே வர நான்கு கண்களும் சந்தித்தன...

Mr சந்தோஷ், நான் சரவணன்
       yes, உங்களுக்கு என்ன வேணும்.

சும்மா சில கேள்விகள்
        நீங்க?
             Inspector
                   சொல்லுங்க sir   

உங்களுக்கு Ms அஞ்சலி தெரியுமா?
       எந்த அஞ்சலி sir ?  அவங்க Doctror ரா? . நான் Medical rep sir, ஒரு நாளைக்கு minimum 50 பேரையாவது meet பண்றேன். எல்லாரையும் ஞாபகம் வச்சிக்க முடியாது. 
  
Doctor இல்ல Nurse, என்ன Mr சந்தோஷ் இவ்வளவு தூரம் தேடி வந்திருக்கோம், சாதரணமா தெரியாதுன்னா எப்படி? சரிதான் நீங்க அஞ்சலி கிட்ட பேசி  கொஞ்ச நாள் ஆகுதுள்ள அதனால மறந்திருப்பீங்க. கலைமகள் college student அஞ்சலி, தெரியாது.
      மௌனம்.

எவ்வளவு முயற்சி செய்தும் பயம் அடங்க மறுத்து சந்தோஷின் முகத்தில் தஞ்ச மடைந்தது.

வாங்க சந்தோஷ் வெளிய போய் coffee சாப்பிடலாம்.  ஒன்றும் பேசாமல் பின் தொடர்ந்தார் சந்தோஷ். இரண்டு  coffee order செய்து ஒன்றை சந்தோஷ் இடம் கொடுத்தார் சரவணன். சந்தோஷின் கைகள் அவரை அறியாமல் E A D G B E என அனைத்து  நாண்களையும் அந்த குவளையில் மீட்டின.

சொல்லுங்க சந்தோஷ், உங்களுக்கு அஞ்சலி
       தெரியும் sir 

அப்பறம் ஏன் தெரியாதுன்னு சொன்னீங்க?
       மௌனம்

சந்தியா தெரியுமா?
       தெரியாது sir 

சரவணனின் கண்கள் சுருங்கின.
       சத்தியமா தெரியாது sir, please sir என்ன நம்புங்க (சந்தோஷ் க்கு அழுகையே வந்தது)

உங்களுக்கும் அஞ்சலிக்கும் எப்படி பழக்கம்.
      Facebook friend sir

இதுவரைக்கும் நேர்ல மீட் பண்ணி இருக்கீங்களா?
     இல்ல sir, நீங்க நினைக்கிற மாதிரி தப்பா எதுவும் இல்ல sir , நிஜமாவே friend தான் sir 

நான் தப்பா எதுவும் சொல்லலியே சந்தோஷ், இல்ல daily night 8 மணிக்கு மேல கால் பண்ணி 1 hr அப்படி என்ன தான் பேசுவீங்க? 
     சும்மா தான் sir.

மறுபடியும் பொய் சொல்லி மாட்டிக்காதீங்க? 
    phone ல அந்த மாதிரி பேசிப்போம்.

எத்தன நாளா நீங்க இப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க?
     Two months சா 

இதுவரைக்கும் அஞ்சலிக்கு  நீங்க எதாவது வாங்கி குடுத்து இருக்கீங்களா?
    Mobile top up பண்ணி குடுப்பேன் அப்புறம், கொஞ்சம் things வாங்கி குடுத்துருக்கேன். 

அஞ்சலியோட வேற friends யாராவது தெரியுமா? அவங்க கூட பேசி இருக்கீங்களா?
     இல்ல sir, அஞ்சலி கூட மட்டும் தான் பேசுவேன்.

உங்க family ?
 ஒரு பையன், ஒரு பொண்ணு, ரெண்டு குழந்தைங்க sir

சரவணனின் கண்களின் remote field communication சரியாய் புரிந்து கொண்ட திருப்பதி அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றார்.

Thanks Mr சந்தோஷ், மறுபடியும் meet பண்ணலாம். நீங்க இன்னும்  நிறைய பேசணும். next time meet பண்ணும் போது சந்தியா பத்தி சொல்லுங்க.

விசாரணையை முடித்திக்கொண்டு சரவணன் காவல் நிலையம் வந்து விட்டார். சிறு நேரம் கழித்து திருப்பதியும் வந்தார்.

          அய்யா, சந்தோஷ் அங்கிருந்து நேரா அவரு வேல பாக்குற Guindy office க்கு போனாரு. அவருடைய Mobile ல இருந்து எந்த call லும் போகல.            ஆனா அவரோட office desk phone (direct line) ல இருந்து call போச்சு. office number Dr கேசவன வச்சி வாங்கிட்டேன். சந்தோஷ் call பண்ணது "ராஜசேகர்" க்கு, "ராஜசேகர்" industrialist Mr.ராஜேந்திரன் பையன். US ல படிச்சிட்டு 8 months முன்னால தான் இங்க வந்திருக்கான். வழக்கமான பணக்கார பசங்க கிட்ட இருக்குற எல்லா நல்ல பழக்கங்களும் இவன் கிட்டயும் இருக்கு. வேல எதுவும் இல்ல சும்மா ஊர் சுத்திக்கிட்டு இருக்கான்.

Impressive திருப்பதி, ராஜேந்திரன் எப்படி?  அப்பா புள்ள உறவு எப்படி?
       அவர பத்தி சொல்ல பெருசா ஒன்னும் இல்ல அய்யா. நல்லவருன்னு கேள்விபட்டிருக்கேன். பையனுக்கும், அப்பாவுக்கும் நல்ல உறவு இல்ல.
        

இரவு சரவணனின் வீடு 


சரவணனின் எண்ணங்களில் சில கேள்விகள் ஓடின...
            சந்தோஷ் எதுக்கு ராஜசேகருக்கு கால் பண்ணனும்?   
                       ரெண்டு பேருக்கும் business link இருக்க முடியாது.
            ராஜசேகர எப்படி விசாரிக்க?
            direct டா போய் சந்தேகம்னு சொல்லி விசாரிக்கலாமா?
            என்ன பண்ணலாம்?
                       .................

வியாழன் காலை 09 : 00 மணி              

அடையாறு, ராஜேந்திரனின் வீடு.  

வாசலில் காவலாளி.

Mr ராஜேந்திரன் இருக்காரா?  அவர பார்க்கணும்  
       முதலாளி வெளியூர் போய் இருக்காங்க.  உங்களுக்கு எதாவது வேணும்னா office ல போய் கேட்டுக்கோங்க.

காவலாளி பேசிக்கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து வாகனம்  கதவை திறக்க உத்தரவு போட்டது. சரவணன் அவ்விடம் விட்டு நகர்ந்தார். 

கதவு திறந்ததும், இரண்டரை கோடி பெறுமானம் உள்ள germany ல்  தயாரான ஆடம்பர  SLS  மகிழ்வுந்து பறந்தது. அந்த வாகனத்தை பின் தொடரும் முயற்சியை சில நொடிகளிலே கை விட்டார் சரவணன். 

கார் சென்ற திசையை தெரிவித்து திருப்பதியிடம் இருந்து விலாசம் வாங்கிக் கொண்டு பின் தொடர்ந்தார். அந்த விலாசம் அவரை அழைத்துச் சென்றது கடற்கரையை ஒட்டிய ராஜேந்திரனின் உல்லாச மாளிகைகளில் ஒன்று.  

மீண்டும் வாசலில் காவலாளி...

நான் inspector , Mr ராஜேந்திரனை  பார்க்கணும்.
       முதலாளி இல்ல sir.

இப்போ உள்ள போனது யாரு ?
      சின்னையா.

சரி, அவர பாத்துட்டு போறேன்.
       சின்னையா, இப்போ யாரையும் பாக்க மாட்டங்க..
...................

சில நொடிகளில் மாளிகைக்குள் சரவணன்.... 

நீச்சல் குளத்தில் ராஜசேகர், மற்றும் மூன்று  "ராஜா" சேகர்கள், இவர்களுடன்  கடல் கன்னிகள் (இன்னும் கன்னிகளா தெரிய வில்லை) 

        யாருடா நீ?  இங்க எப்படி வந்த?  security .....
நான் inspector, வாசல் வழியாத்தான் வந்தேன், உங்க security tired ஆகி rest எடுத்துகிட்டு இருக்காரு.

        எதுவா இருந்தாலும் அப்பா office ல போய் பேசிக்கோங்க, நாங்க busy ya இருக்கோம்.  
நீங்க busy யா இருக்கீங்கனு தெரியுது, ஆனா நான் உங்களத்தான் பார்க்கணும்.

        இப்ப நீங்க போகலேன்னா உங்க உயிருக்கு உத்தரவாதம் இல்ல inspector 
அதையும் பார்க்கலாம்.

1. Jab
2. Cross
3. Hook
4. Uppercut
5. Front Kick
6. Roundhouse Kick

7. Side Kick
  
என்று 600 கலோரிகளை எரித்தார் சரவணன்.  

இன்னைக்கு காலைல workout பண்ண time கிடைக்கல, Thanks ராஜசேகர், நீங்களும் join பண்றீங்கள இல்ல co-operate பண்றீங்களா. 

தன்னுடைய படைகள் அனைத்தும் துவம்சம் செய்து மீண்டும் தயாராக இருக்கும் சரவணன். Mobile போன் நீச்சல் குளத்திற்கு  வெளியே, கூலிப்படைகளை கூப்பிடவும் வழியில்லை. வெள்ளை துண்டை கட்டிக்கொண்டு வந்தார் ராஜசேகர். குளத்திலேயே தஞ்சம் அடைந்தார்கள் கன்னிகள்(?). இருவரும் அங்கிருந்த சாய்வான நாற்காலியில் அமர்ந்தனர். ராஜசேகரின் கண்கள் சரவணனின் அருகில் இருந்த அவனுடைய அலைபேசியிலேயே மையம் கொண்டிருந்தது. 

ரொம்ப நேரம் காக்க வைக்க மாட்டேன் Mr ராஜசேகர்? கேக்குற கேள்விக்கு சரியா பதில் சொன்னீங்கன்னா போதும்.

உங்களுக்கும் சந்தோஷ்க்கும்  எப்படி பழக்கம்?
         என் friend டோட friend 

சந்தோஷ் மேல எங்களுக்கு சந்தேகம் இருக்கு, அவர உங்களுக்கு எத்தன நாளா தெரியும் 
       கொஞ்ச நாளாத்தான் தெரியும். 6 months 

சந்தோஷ் friend அஞ்சலி தெரியுமா?
     தெரியாது.

சந்தியா 
    தெரியாது.

உங்க phone குடுங்க station க்கு call பண்ணிட்டு தர்றேன் என்று பதிலுக்கு காத்திராமல் அருகில் இருந்த அலைபேசியை எடுத்தார் சரவணன்.

அலைபேசி கடவுச்சொல் கேட்டது...

Password சொல்லுங்க  ராஜசேகர்.
       வெறுப்புடன் பார்த்துவிட்டு நான்கு எங்களை கூறினான்...

அலைபேசி தவறு என்றது 

மீண்டும் நான்கு எண்கள்..... தவறு 

மீண்டும் நான்கு எங்கள்....   இம்முறை தவரோடு நில்லாமல். இந்த அலைபேசியில் உள்ள தகவல்கள் அழிக்கப்பட்டதாக செய்தி கட்டியது.

ராஜசேகரின் சிரிப்பு....

சரவணனின் புன்னகை...

Mr . ராஜசேகர் நீங்க நாளைக்கு கந்தன்சாவடி station ல வந்து உங்க mobile ல வாங்கிக்கோங்க. என்று கூறி விட்டு காவல் நிலையம் வந்தார் சரவணன்.

சரவணன் சென்ற பிறகு, ராஜசேகர் தன் தந்தை அலுவகத்தில் பணிபுரியும் நம்பிக்கையான மேலாளரை தொலைபேசியில் அழைத்தார். இங்கு நடந்தவற்றை கூறினார்.

manager அந்த inspector க்கு காசு கொடுத்து வாங்க முடியுமானு பாருங்க.
       சின்னையா, இந்த விசயம் முதலாளிக்கு தெரிஞ்சா?

சொல்லாதீங்க, நமக்குள்ள முடிச்சிரலாம், காசு எவ்வளவு ஆனாலும் பரவா இல்ல.
      நான் அத உடனே என்னனு பாக்குறேன், நீங்க கவலைப்படாதீங்க.

சிறுது நேரம் கழித்து ராஜசேகரை தொடர்பு கொண்டார் மேலாளர்.

சின்னையா, அது கொஞ்சம் சிரமம் போல இருக்கு.
     ஏன் அப்படி சொல்றீங்க manager
அந்த inspector சம்பளத்துக்காக இந்த வேலைக்கு வரல, ஊர்ல நெறைய சொத்து இருக்குதாமாம், police வேலை அவருடைய இலட்சிய வேலையாம். அவங்க அப்பாவோட condition காரணமா கொஞ்ச நாள் வெளிநாடெல்லாம் போய்டு வந்திருக்காரு. நாம வேற வழி தான் பார்க்கணும்.
   சரி நான் பாத்துக்குறேன்.

சின்னையா, அவசரப்பட்டு எதுவும் செய்யாதீங்க, பொறுமையா இருங்க, முதலாளி வரட்டும் பேசிக்கலாம்.
    சரி, நான் பாத்துக்கிறேன் manager

இரவு 08 : 00 மணி 

சரவணன் வீடு...

      நுண்ணலை அடுப்பில் ஏற்க்கனவே இறந்து, வெந்து கொண்டு இருந்தது,  தொலைக்காட்சி பெட்டியில் ஏதோ திகில் படம் ஓடிக்கொண்டிருந்தது...
    ராஜசேகரின் அலைபேசியை தன் கணினியில் இணைத்தார். rescue எனும் மென்பொருள் உதவியுடன் இறந்த கோப்புகளுக்கு உயிர் கொடுத்து மீட்டெடுத்தார். அடுக்கடுக்காக பல folder கள். ஒவ்வொன்றின் உள்ளேயும் சில image files மற்றும் text file கள். அதில் ஒரு folder மட்டும் கடவுச் சொல் கொடுத்து பூட்டப்பட்டு இருந்தன.    

சரவணன் தன்னுடைய கல்லூரி அனுபவத்தை தனக்கு தானே கூறிக்கொண்டார்..      
      கடவுச்சொல்லை உடைக்கும் பத்து சிறந்த வழிகளில் 

1. Dictionary attack
2. Brute force attack
3. Rainbow table attack
4. Phishing
5. Social engineering
6. Malware
7. Offline cracking
8. Shoulder surfing
9. Spidering
10. Guess

இந்த வேளையில் திடீரென, ஆங்கிலப்படங்களில் தவறாமல் இடம் பெரும் அந்த புனித "7" எழுத்துகள் காதில் விழுந்தது.  

சரவணன் 10 வது வழியை  முயற்சி செய்தார் அந்த 7 எழுத்து கொண்டு, திறக்க வில்லை, அதையே 5 எழுத்தாக சுருக்கி முயன்றார். மாயக் கதவு  திறந்தது. ஆனால் எந்த file லையும் open செய்ய முடியவில்லை. அனைத்தும் encrypt செய்யப்பட்டுள்ளன. 

அமெரிக்காவில் இருக்கும் நண்பருக்கு தொலைபேசியில் அழைத்தார் சரவணன்.

ராஜ், இப்போ பேசலாமா?
     சொல்லுடா police, எப்படி போகுது அந்த murder investigation

அத பத்திதான் பேசணும், encrypt பண்ண files இருக்கு அத decrypt பண்ணி தரியா? என்கிட்டே அந்த utility இல்ல  
      Sure , send me  

சில நிமிடங்களில்....
   சரவணன், check பண்ணிட்டு சொல்லு. blowfish use பண்ணி இருந்தது  

ok டா தேவப்படா மறுபடியும் call பண்றேன். அப்புறம் அங்க இருக்குற நம்ப பசங்க கிட்ட சொல்லு, இந்த year donation ன இங்கவுள்ள hospital க்கு கொடுப்போம்னு.

    நிச்சயமா சொல்றேன், ஒன்னு மட்டும் மறக்காத சரவணா we are waiting for you  

சரி, அப்புறம் பேசுறேன்...

வெள்ளி காலை 10 மணி  

     inspector சரவணன் என்ற ராஜசேகரின் கேள்விக்கு அய்யா உள்ளே இருக்காரு என்றது அனுப்பி வைத்தார் காவலர்.

வாங்க Mr . ராஜசேகர் நல்லது நீங்களே வந்துட்டீங்க அல்லது நாங்க வந்திருப்போம்.
    எனக்கு time இல்ல inspector , என்னோட mobile குடுங்க நான் போகணும்.

நிறைய டைம் இருக்கு, உட்காருங்க பேசலாம். சொல்லுங்க ராஜசேகர் எதுக்காக சந்தியாவ கொலை செஞ்சீங்க? எங்க கிட்ட வலுவான  ஆதாரம்  இருக்கு.
     அப்படியா, அப்ப நீங்களே கண்டு பிடிங்க, உங்களுக்கு தான் ஏற்கனவே தெரியுமே.

சரவணன், புன்னகையுடன், வழக்கமான police சம்பிரதாயப்படி finger prints DNA test க்கு உங்க sample already அனுப்பியாச்சு. result வந்த வுடனே நீங்க permanent டா உள்ள உட்கார வேண்டியதுதான்.   
     அது அவ்வளவு easy இல்ல inspector , உங்களுக்கு negative result தான் கிடைக்கும். நானா சொல்றவரைக்கும் உங்களால எதையும் prove பண்ண முடியாது. நான் சொன்னாலும் prove பண்ண முடியாது.

அப்படியா? உங்க mobile இருந்த photos எல்லாம் உங்களுக்கு எதிரா சாட்சி சொல்ல தயாரா இருக்கு தெரியுமா?  
      ...............
      அந்த photos delete ஆயிருச்சே.

application use பண்ற நீங்களே இவ்வளவு smart டா இருக்கும் போது, நா அந்த மாதிரி நெறைய எழுதி இருக்கேன் Mr
    .................

உனக்கும் அஞ்சலிக்கும் more than 6 months பழக்கம், ரெண்டு பேரும் ரெகுலர் connection ல இருந்து இருக்கீங்க for the purpose of virtual phone sex
அந்த சமயத்துல தான் உனக்கு சந்தியாவ பத்தி தெரிய வந்தது. அஞ்சலி மூலமா சந்தியா கூட பேசி இறுக்க. college hostel ல every saturday நடக்குற students party ல பொண்ணுங்க nude டா டான்ஸ் ஆடி இருக்காங்க.  நீ அனுப்பி வச்ச micro spy camera மூலமா அஞ்சலி சந்தியா வோட nude photo வ எடுத்து அனுப்பி இருக்கா. அதுக்காக நீ அவளுக்கு பணம் கொடுத்திருக்க. 

hostel verification protocol ல break பண்ண ஆள வச்சி சந்தியா அம்மா phone  தூக்கிட்ட, nude photo வச்சி மிரட்டி சந்தியாவ வரவச்சிருக்க அங்க வச்சி rape பண்ணி கொலையும் பண்ணிட்ட.

       very good inspector..

நீ என்ன Psycho வாடா? படிக்கிற பொண்ண ஏன்டா இப்படி பண்ண?
       அது உங்களுக்கு சொன்ன புரியாது inspector, எத்தன நாள் தான் ஒரே மாதிரியே இருக்குறது, ஒரு change க்கு தான்.

எதுக்கு அந்த பொண்ணோட பாடி யா குழாய்ல போட்ட?
       அது பசங்க பண்ண வேலை, actual plan வேற, unexpected check post வந்துட்டதால பயத்துல பாதி வழியில போட்டுட்டு போயிட்டாங்க.
   
அப்போது finger print, DNA report வந்தது. சந்தியாவின் உடலில் இருந்த கைரேகையும் மரபணுவும் ராஜசேகரனுடன் ஒத்துப்போக வில்லை.   
       mobile குடுங்க inspector time ஆகுது நான் போகணும்.

திருப்பதி இவன உள்ள வைங்க, இப்போ வர்றேன் என்று DNA result lab க்கு phone செய்தார். 

Doctor DNA report negative னு வந்திருக்கே, கண்டிப்பா இவன்தான் Doctor   
     இல்ல inspector, ஆனா Y-chromosome match இருக்கு. 


இவனோட வீட்ல இவனும் இவன் அப்பாவும் தான்,      "அப்பாவும்"....  



முற்றும் ...

சரவணனின் விசாரணையில் இருந்து சில குறிப்புகள் 

  • ராஜேந்திரன் facebook மூலமாக முதலில் அஞ்சலியை பிடித்தார்.    
  • சந்தோஷ், ராஜேந்திரனுக்கு சிட்டுக்குருவி மாத்திரைகள் விற்பவர், பின்பு ராஜசேகரனுக்கும்  பழக்கமானார்.
  • சந்தோஷின் சேவையை மெச்சி, ராஜசேகர் அஞ்சலியை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். 
  • ராஜசேகரின் ஆணைப்படி, அஞ்சலி சந்தியாவோடு நெருங்கி பழகவே அவருடைய அறையில் இணைந்தார்.
  • கலைமகள் கல்லூரியில் சனிக்கிழமை கொண்டாட்டத்தில் ஆசிரியர்கள் யாருக்கும் அனுமதி இல்லை, மாணவிகள் தங்கள் விருப்பம் போல் இருக்கலாம், கேமரா, செல் போன்றவைகளுக்கு அனுமதி இல்லை. அதனால் தான் அஞ்சலிக்கு micro spy கேமரா வாங்கிக் கொடுத்தார் ராஜசேகர்.  

சரவணனின் வேட்டை தொடரும்...

17 comments:

  1. அருமை அருமை... இப்பகுதியின் இறுதியில் மிகச்சில தவறுகளை உணர்ந்தேன்.... திருத்திட.... அப்ப = அப்பா, ஆதாரம் = அதரம்

    ReplyDelete
    Replies
    1. ஆனந்த் தங்கள் கருத்துக்கு நன்றி.
      நீங்கள் இதை முழுமையாக படித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி.
      பிழைகளை சரி செய்துவிட்டேன்.

      Delete
  2. nice arun sema twist keep up the good work

    ReplyDelete
  3. நல்ல கதை அருண் நல்லா சொற்களை பயன்படுத்தி இருக்கீங்க
    தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜனனி, நிச்சயமா நல்ல எழுத்துகளையும் கருத்துகளையும் அளிக்க முயற்சி பண்றேன்.

      Delete
  4. Rajkumar SubramanianAugust 9, 2012 at 12:48 PM

    அடுத்தது எப்பொழுது?

    ReplyDelete
    Replies
    1. வெகு விரைவில் ராஜ், உன்னுடைய எதிர்பார்ப்பு எனக்குள் பயத்தை உண்டாக்குகிறது

      Delete
  5. Priyadharshini SethuAugust 9, 2012 at 11:00 PM

    What a twist!! Eagerly awaiting for the next episode!!

    ReplyDelete
    Replies
    1. அடுத்த கதைக்கு கொஞ்ச நாளாகும் நினைக்கிறேன் பிரியா. கற்பனை ஊற்று வற்றி விட்டது. ஊற நாளாகும்.

      தங்களது ஆதரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  6. Learned quite a lot of Tamil words(new), couldn't understand some of them though, but guessed most of them. Excellent job except for some spelling mistakes. And the other thing I noticed is that there are missing punctuation marks in few places which makes it a little hard to understand the context.I mean i have to read the sentence more than once to understand. Otherwise, keep it up Anna. Waiting for more your interesting creation!

    ReplyDelete
    Replies
    1. சகோதரிக்கு நன்றி,

      எவ்வளவு முயற்சி செய்தாலும் என்னால் சில தவறுகளை தவிர்க்க முடிவதில்லை.

      மீண்டும் முயற்சிக்கிறேன்.

      Delete
  7. நல்ல crime கதை. அடுத்தது எப்பொழுது. நிறைய technical words பயன்படுத்தி இருக்கீங்க ராஜேஷ் குமார் மாதிரி. சுவராசியமாக இருந்தது. வாழ்த்துக்கள் அருண். இன்னும் நிறைய கதை எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சவிதா முகேஷ்,

      மிக்க நன்றி, தொடர்ந்து படிங்க.

      அடுத்த கதை ஆரம்பிச்சிட்டேன், நேரம் கிடைக்கும் போது கீழே உள்ள லிங்க்க படிங்க.

      http://arun-radhakrishnan.blogspot.com/2012/08/blog-post_16.html

      Delete
  8. கோடம்பாக்கத்தின் எல்லாக் கதவுகளும் திறக்கும் நாள் தொலைவில் இல்லை.

    கதையில் உள்ள விறுவிறுப்பை உணர நீண்ட வரிகளைத் தாண்டி வரவேண்டியுள்ளது.

    கதையில் காயம் இல்லை... ஆனால் வலி இருக்கிறது...

    முற்றும் என்ற சொல்லுக்கு முன்னால் .....

    //இவனோட வீட்ல இவனும் இவன் அப்பாவும் தான் //

    அப்பப்பா !!!! (ரொம்ப நல்லவரு) ....

    கதையின் சுவாரசியம் காக்க
    //அவர பத்தி சொல்ல பெருசா ஒன்னும் இல்ல அய்யா. நல்லவருன்னு கேள்விபட்டிருக்கேன்//.
    //பையனுக்கும், அப்பாவுக்கும் நல்ல உறவு இல்ல.!!!//
    கெட்ட உறவுகள் இருக்குங்கிறத இப்படியும் சொல்லலாமோ!!!
    திருப்பு முனை... (Turning Point)

    கதை நல்முயற்சி... தொடர் பயிற்சி ... உயர்ச்சி தரும்...

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மாப்ள, உன்கிட்ட இருந்து இந்த மாதிரி comment
      கிடைச்சது உண்மைலயே எனக்கு சந்தோசமாவும் பெருமையாவும் இருக்கு.

      என் கற்பனைக்கு நான் கொடுத்த எழுத்து உருவத்தை சரியா புரிஞ்சிக்கிட்ட மாப்ள !!!

      Delete
  9. Good one with unexpected twists. Heart feels bit heavy at the end. Nice to read in tamil. Waiting for the next one, may be little lighter.

    ReplyDelete
    Replies
    1. செந்தில், நீங்க படிச்சதுக்கு நன்றி, அடுத்தமுறை கொஞ்சம் மென்மையா எழுத முயற்சி பண்றேன்.

      Delete