cookie

Thursday, August 9, 2012

அன்று பூத்த மலர்கள்


காதல் பரிசு  

அகத்தில் அவள் நீக்கமற நிறைந்திருந்தாலும் 
என்னோடு புறத்திலும்  இருக்க வேண்டி, விரும்பி  
இரு திங்கள் உதிர்ந்த என்னவளின் - உவர் துளிகள் 
இன்று மணித்துளிகளாக என் இடக்கையை அலங்கரிக்கின்றன...



என் கல்லூரி வாழ்வில் "கவிதை" என்று நானே கூறிக்கொண்ட என்னுடைய  கிறுக்கல்கள்


மனம் 

என் உடலில் இல்லாத பகுதி மனம் - அது 
உன்னை நினைக்குதே தினம் 

சம்சாரம் அது மின்சாரம் 

சம்சாரத்துடன் நொடிக்கு மூன்று முறை வந்த 
சண்டையால், தற்கொலை செய்து கொண்டது 
சமையலறையின் பல்பு. 

நெக்டர் 


உன் இதழ்கள் என்ன நெக்டர் சுரக்கும் ஊற்றா,

      ஒரே முத்தத்தில் ரத்தத்தின் சர்க்கரை அளவு 
                  முன்னூறு ஆனதேன்? 

கடத்தி


செப்புக் கம்பிகள் நற்கடத்திகள் 
         கற்றுக்கொண்டது  இயற்பியலில் - என்னை 
செப்படி வித்தை செய்த உன் கண்கள்  மீக்கடத்திகள் என்று 
        கற்றுக்கொண்டது காதல் உளவியலில்.

காதல் வைரஸ்


என் மனம் எனும் கணினியை தாக்கும் 
    லவ் பக் வைரஸ் நீ என்றால்
என் anti வைரஸ் software அனைத்தையும் 
   நானே uninstall செய்து விடுவேன்.

வருகை பதிவு


கல்லூரிக்கு வருகிறேன் என்தைவிட - உன்னை 
     காண  வருகிறேன் என்ற களிப்பு மிகுதியால் 
விடுப்புக்கு விண்ணப்பிக்கவே விருப்பமில்லை 
    கண்ணே...


நினைவு வரும் போதெல்லாம் மலரும்...

14 comments:

  1. நன்றாக மலர்ந்துள்ளது அருண்
    தோப்பாக மலர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Priyadharshini SethuAugust 9, 2012 at 9:03 PM

    Nice!!

    ReplyDelete
  3. என்றோ எழுதிய கவிதைகளை ஆவணபடுத்தும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது... வாழ்த்துக்கள்...

    அது என்னமோ தெரியல... எழுத்துப்பிழைகள் எளிதாய் என் கண்ணில் பட்டுவிடுகிறது.... செப்படி வித்தை = செப்படி விதத்தை

    மெருகேறி மென்மேலும் வளரட்டும் மலரட்டும் உங்கள் கவிதை பூக்கள்....

    உங்கள் அன்பின்
    ஞா. ஆனந்த கிருஷ்ணன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆனந்த கிருஷ்ணன்,

      பல சமயங்களில் இமை செய்யும் தவறு என் கண்களுக்கு தெரிவதில்லை.

      தவறுகளை தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

      Delete
  4. கவிதை மெருகேற்றும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
    சொற்களுக்கான எதுகை மற்றும் மோனைகளை அர்த்தங்களுடன் வரிசபடுத்தினால், கவிதையின் நயம் கூடும்...
    எனக்கு கடைசிவரைக்கும் தெரியாமல் போன விஷயம் தெளிந்தது...
    நூறு சதவீத வருகைப் பதிவு...

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துக்கு மிக்க நன்றி. நிச்சயம் நீங்கள் குறிப்பிட்டுள்ள திருத்தங்களை கவனத்தில் கொள்கிறேன். நேரம் கிடக்கும் போது என்னுடைய மற்ற பதிவுகளையும் படிக்கவும். தங்களின் மேலான கருத்து என்னை மேம்படுத்த உதவும்.

      Delete
    2. 126 absent sir 127....

      3 years mapla....

      Delete
    3. இவ்வளவு சுருதி சுத்தமான கமெண்ட் பார்த்தவுடன் சொல்லலாம் none other than நம்பி னு...

      Delete
    4. additional clue "நூறு சதவீத வருகைப் பதிவு"

      உன்னத் தவிர வேற யாருக்கும் தெரியாதே...

      Delete
  5. Replies
    1. நன்றி சவிதா முகேஷ்,
      நேரமிருந்தால் மற்ற பதிவுகளையும் படித்து தங்கள் கருத்தை தெரிவிக்கவும்...

      Delete